தந்தை செல்வாவின் 47ஆவது நினைவேந்தல் யாழில் முன்னெடுப்பு!

தந்தை செல்வா நினைவு அறக்காவற் குழுவின் ஏற்பாட்டில் தந்தைசெல்வாவின் 47ஆவது நினைவேந்தல் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை(26) யாழ்ப்பாணம் தந்தை செல்வா நினைவிட வளாகத்தில் ஓய்வுநிலை ஆயர் கலாநிதி சு.ஜெபநேசன் தலைமையில் இடம்பெற்றது.

இதேவேளை தந்தைசெல்வாவின் சிலைக்கு மலர் மாலை அணிவித்ததுடன் அன்னாரின் சமாதிக்கு மலரஞ்சலி செலுத்தினர்.

இவ் நிகழ்வில் நினைவுப் பேருரையினை யாழ்ப்பாணம் பல்கலைக்கழக அரசியல் விஞ்ஞான பணிமனை பேராசிரியர் கே.ரி. கணேசலிங்கம் இலங்கை தமிழ் தேசிய இனத்தின் விடுதலைக்கான வாய்ப்புகளும், சவால்களும் என்னும் கருப்பொருளில் உரையாற்றினர்.

இவ் நிகழ்வில் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், முன்னாள் மாநகர முதல்வர் இமானுவேல் ஆனோல்ட், தந்தை செல்வா நினைவு அறக்காவற் குழுவின் உபதலைவர் குலநாயகம், தமிழரசுக்கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சோ.மாவைசேனாதிராஜா, வடமாகாண சபையின் அவைத்தலைவர் சி.வி.சிவஞானம், உறுப்பினர்கள் மற்றும் நலன் விரும்பிகள் பலரும் கலந்துகொண்டனர்

சிறப்புச் செய்திகள்