மகனை பார்க்கச் சென்ற தந்தையை கட்டிவைத்து மூக்கை கடித்த மச்சான்மார்

“கதவை திறக்காத மனனே…அப்பாவ பார்க்க விடமாட்டாங்க…

அவங்கள விரட்டுப்பா.. எனக்கு பயமா இருக்கு” இணையத்தை கதிகலங்க வைத்த ஒரு காணொளி நேற்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி பார்ப்போரை கண்ணீரில் நனைத்தது.

என்னதான் நடந்தது? இந்த தந்தை மகன் பாசப்போராட்டம் எதற்காக?

கண்ணியாகுமரி – மணவாளக்குறிச்சியை சேர்ந்த பி.எல் பட்டதாரி பிபின் பிரியன் மற்றும் பிலாங்கலை பகுதியைச் சேர்ந்த ஜெபபிரியாவும் காதலித்து திருமணம் செய்து கொள்கின்றார்கள்.

இந்த தம்பதிக்கு 4 வயதில் ஒரு ஆண் குழந்தை இருக்கின்றார். ஆனாலும், கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர்.

பிலாங்கலை பகுதியில் இருக்கும் தாய் வீட்டில் தனது மகனுடன் ஜெயப்பிரியா வசித்து வந்துள்ளார். ஆனாலும், தனது மகனை பார்ப்பதற்காக பிபின் பிரியன் அடிக்கடி ஜெயப்பிரியாவின் வீட்டிற்கு செல்வது வழக்கம்.

ஆனால், இந்த முறை நடந்தது என்னவோ பாசப்போராட்டம்!

ஆம். ஜெயப்பிரியாவின் குடும்பத்தினர் மகனை பார்க்க அனுமதி வழங்காததுடன், சிறுவனை ஒரு தனி அறையில் வைத்து பூட்டியுள்ளனர். இதனால் அப்பாவை காணமுடியாது தவித்த சிறுவன் செய்வதறியாது அழுதுக் கொண்டிருக்கின்றான்.

ஆனாலும், அந்த அறையிலிருந்து மிகவும் ஏக்கத்தோடு அப்பா…அப்பா… என அழுது கொண்டே அழைக்கின்றான். அதை பார்த்து உணர்சிவசப்பட்ட பிபின் பிரியன், ஜன்னலின் கண்ணாடியை தனது கைகளால் உடைத்து பாச மகனுடன் பேச முற்பட்டார்.

கண்ணாடியை மிகவும் ஆக்ரோஷமாக உடைத்ததால், பிபின் கைகளில் இரத்த காயங்கள் ஏற்படவே, அதையும் பொருட்படுத்தாது மகனுடன் கொஞ்சி பேசுகின்றார்.

இதன்போது சாமர்த்தியமாக செயற்பட்ட அந்த சிறுவன், கதவின் உள் பக்கமாக தாழிட்டு கொள்கின்றான். என்னவொரு புத்திசாலி தனம்.. கதவை திறந்து யாரும் வந்து விட்டால் அப்பாவுடன் பேச முடியாது என எண்ணியிருப்பான் போலும்.

இதன்போது, கதவை சரமாரியாக தட்டிய தட்டிய ஜெயபிரியாவின் அண்ணன்மார்கள், கத்தி கூச்சலிட்டு கதவை திறக்க சொல்கிறார்கள்… அப்போது சத்தம் கேட்டு பயத்தில் சிறுவன் செய்வதறியாது திணறுகின்றான்.

அப்போது ‘கதவை திறக்காதே மகனே… டாடிய பார்க்க விடமாட்டவ’ என அப்பா கதறுகின்றார். அப்பாவின் அழுகையை பொறுத்துக்கொள்ள முடியாத சிறுவன், பயம் கலந்த அழுகையுடன் ‘அவங்கள விரட்டுங்கபா’ என மழலை குரலில் சொல்கின்றான்.

வீடியோவை இங்கே அழுத்தி பார்க்கவும் https://www.facebook.com/watch/?ref=embed_video&v=970059001335754

இவர்களின் பாசப்போராட்டத்தை பார்க்கும் போது கண்களில் கண்ணீர் மட்டுமே கொட்டுகின்றது.

கதவை தட்டும் சத்தம் அதிகரிக்கவே அப்போது செய்வதறியாது, ஓடிய சிறுவன் கதவின் தாழ்பாளை திறக்கவே ஜெயப்பிரியாவின் அண்ணன்கள் ஆக்ரோஷமாக உள்ளே வந்து சிறுவனை தூக்கிசென்றுவிட்டனர்.

ஆனாலும், முயற்சியை விடாது தொடர்ந்து தனது மகனை பார்த்து விடவேண்டும் என்ற ஏக்கத்தில் இருந்த பிபினின் கைகளை ஜன்னலோடு சேர்த்து வைத்து கட்டியுள்ளனர் ஜெயபிரியாவின் அண்ணன்மார்கள்.

மேலும், பிபினின் மூக்கையும் கடித்து விட்டதாகவும் கூறும் காட்சிகள், இந்த உலகில் எந்த அளவிற்கு மனசாட்சியே இல்லாத மனிதர்கள் வாழ்கின்றார்கள் எனவும் எண்ணத்தோன்றுகின்றது.

அதன்பின்னர் இந்த சம்பவம் தொடர்பகாக அயலவர்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கவே, அங்கு விரைந்த பொலிஸார் பிபிலனை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக இரு தரப்பினரும் பொலிஸில் புகார் அளித்திருக்கும் நிலையில், பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

என்ன தான் கணவன் மனைவியிடை கருத்துவேறுபாடுகள், பிரச்சினைகள் இருந்தாலும் அவர்கள் மூலமாக இந்த அழகிய உலகை காண வந்த அந்த பிஞ்சு உயிர்களுக்கு இந்த உலகை நரகமாக மாற்றி காட்டுவது என்னவோ நம் நடத்தைகள் மட்டும் தான்!!

சிறப்புச் செய்திகள்