இழுபடுகின்றது தமிழரசுக் கட்சி வழக்கு…

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வழக்கில் மாவை சேனாதிராஜா, சிவஞானம் சிறீதரன் உட்பட 4 எதிராளிகள் நேற்று வெள்ளிக்கிழமை தமது பதில் மனுக்களைத் தாக்கல் செய்வர் என முன்னாயத்தக் கூட்டத்தில் உறுதி அளித்த போதிலும் அதை அவர்களின் சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை. அதனால் வழக்கு மேலும் 11 தினங்களுக்குத் தள்ளிவைக்கப்பட்டது. இதேசமயம் வழக்கில் இடையீட்டு எதிராளியாகத் தன்னைச் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று விண்ணப்பித்துள்ள சிறீதரன் தரப்பு ஆதரவாளரான – கிளிநொச்சியைச் சேர்ந்த ஜீவராஜா என்பவர் தமது விண்ணப்பத்தில் […]

இரா.சம்பந்தன் அவர்களின் பூதவுடலுக்கு பாராளுமன்றத்தில் அஞ்சலி.

முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவருமான காலஞ்சென்ற கௌரவ இராஜவரோதயம் சம்பந்தன் அவர்களின் பூதவுடலுக்கு சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன மற்றும் பிரதமர் கௌரவ தினேஷ் குணவர்தன ஆகியோர் பாரளுமன்றக் கட்டடத் தொகுதியில் இன்று (03) இறுதி அஞ்சலி செலுத்தினர். அத்துடன், பாராளுமன்றத்தின் குழுக்களின் பிரதித் தவிசாளர் கௌரவ அங்கஜன் இராமநாதன், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் இந்த இறுதி அஞ்சலி நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர். ஜனாதிபதி கௌரவ ரணில் […]

தந்தை செல்வாவின் 47ஆவது நினைவேந்தல் யாழில் முன்னெடுப்பு!

தந்தை செல்வா நினைவு அறக்காவற் குழுவின் ஏற்பாட்டில் தந்தைசெல்வாவின் 47ஆவது நினைவேந்தல் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை(26) யாழ்ப்பாணம் தந்தை செல்வா நினைவிட வளாகத்தில் ஓய்வுநிலை ஆயர் கலாநிதி சு.ஜெபநேசன் தலைமையில் இடம்பெற்றது. இதேவேளை தந்தைசெல்வாவின் சிலைக்கு மலர் மாலை அணிவித்ததுடன் அன்னாரின் சமாதிக்கு மலரஞ்சலி செலுத்தினர். இவ் நிகழ்வில் நினைவுப் பேருரையினை யாழ்ப்பாணம் பல்கலைக்கழக அரசியல் விஞ்ஞான பணிமனை பேராசிரியர் கே.ரி. கணேசலிங்கம் இலங்கை தமிழ் தேசிய இனத்தின் விடுதலைக்கான வாய்ப்புகளும், சவால்களும் என்னும் கருப்பொருளில் உரையாற்றினர். […]