கடலில் மிதந்து வந்த போத்தலில் இருந்த திரவத்தை மது என்று குடித்து உயிரிழந்தவர்களின் கடைசி செல்பி

தங்காலை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து சர்வதேச கடற்பரப்புக்கு கடந்த 6 ஆம் திகதி 6 மீனவர்களுடன் சென்ற ‘Devon 5’ மீன்பிடிக் கப்பலில் பயணித்த 5 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டிருந்த போது, ​​கடலில் மிதந்த பாட்டிலில் இருந்த திரவத்தை மது என நினைத்து குடித்துள்ளனர்.அதன் பிறகு அவர்கள் நோய்வாய்ப்பட்ட நிலையில் கப்பலில் பயணித்த 42 வயதான நயன காந்த, 24 வயதான பதும் டில்ஷான், 32 வயதான சுஜித் சஞ்சீவ, 33 வயதான […]

இலங்கையில் 16 வயதுக்குட்பட்ட 85 வீத சிறுமிகள் காதல் என்ற பெயரில் ஏமாறுகிறார்கள்!

16 வயதுக்குட்பட்ட சிறுமிகளில் 85 வீதமானோர் காதல் என்ற பெயரில் பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளாகுவதாக பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் கிடைத்தால் உடனடியாக பொலிஸாருக்கு தெரிவிக்குமாறும் அவர் கூறினார். சிறுவர்களின் பாதுகாப்பு தொடர்பில் பொதுமக்களுக்கு மாபெரும் பொறுப்புள்ளது. எனவே சிறுவர்களுக்கு எதிராக இடம்பெறும் குற்றச்செயல்களைத் தடுக்க முயற்சி எடுப்போம் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

இத்தாலியில் வசிக்கும் தம்பதி பெயரில் யாழில் விவாகரத்து!

வெளிநாட்டில் வசிக்கும் தம்பதியினரின் பெயரில் யாழ்ப்பாணத்தில் விவாகரத்து பெற்றுக் கொடுத்தமை தொடர்பில் நீதிமன்றில் வழக்கு விசாரணைகள் நடைபெற்று வரும் நிலையில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சட்டத்தரணியின் அலுவலகத்தில் பொலிஸார் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இருவர் திருமணமாகி இத்தாலியில் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு இடையில், சில வருடங்களுக்கு முன்னர் மனஸ்தாபங்கள் ஏற்பட்டு இருவரும் இத்தாலியில் பிரிந்து வாழ்ந்துள்ளனர். இந்நிலையில் கணவன், சாவகச்சேரியில் வசிக்கும் தனது சகோதரியிடம், தமக்கு யாழ்ப்பா ணத்தில் திருமணம் நடைபெற்றமையால் யாழ்ப்பாணத்தில் விவாகரத்திற்கு விண்ணப்பித்து […]

இரா.சம்பந்தன் அவர்களின் பூதவுடலுக்கு பாராளுமன்றத்தில் அஞ்சலி.

முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவருமான காலஞ்சென்ற கௌரவ இராஜவரோதயம் சம்பந்தன் அவர்களின் பூதவுடலுக்கு சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன மற்றும் பிரதமர் கௌரவ தினேஷ் குணவர்தன ஆகியோர் பாரளுமன்றக் கட்டடத் தொகுதியில் இன்று (03) இறுதி அஞ்சலி செலுத்தினர். அத்துடன், பாராளுமன்றத்தின் குழுக்களின் பிரதித் தவிசாளர் கௌரவ அங்கஜன் இராமநாதன், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் இந்த இறுதி அஞ்சலி நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர். ஜனாதிபதி கௌரவ ரணில் […]

பாணிபூரிக்கு தடை

கர்நாடக சுகாதாரத்துறையினரால் மாநிலம் முழுவதிலும் உள்ள 250 பாணி பூரி மாதிரிகள் பெறப்பட்டு நடாத்திய பரிசோதனையில் 40 மாதிரிகளில் புற்றுநோயை உண்டாக்கும் காரணிகள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆய்வில் நீலம், Tartrazine போன்ற இரசாயனங்கள் பயன்படுத்தப்படுவதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கோலி பிளவரை வைத்து செய்யப்படும் கோபி மஞ்சூரியன் மற்றும் சிக்கன் கபாப் போன்ற பிற தின்பண்டங்களில் இதுபோன்ற காரணிகள் இருந்ததால் அவற்றை பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டதை போல் பானிபூரியிலும் புற்றுநோய் நிறமூட்டும் காரணிகள் இருப்பதால் கர்நாடக அரசு […]

ஒரே ஆண்டில் ரூ 170 கோடி நன்கொடை அளித்த பெண்மணி.

இந்தியாவின் பெரும் கோடீஸ்வரர்களாக அறியப்படும் முகேஷ் அம்பானி மற்றும் கெளதம் அதானி ஆகியோர் செய்யாததை பெண் ஒருவர் செய்துள்ளார். 2023ல் அதிக நன்கொடை அளித்துள்ள பெண்களின் பட்டியலில், இந்தியா வரிசையில் ரோகினி நிலேகனி முதலிடத்திற்கு வந்துள்ளார். பொதுவாக ரிலையன்ஸ் அறக்கட்டளையின் தலைவராக இருக்கும் நீதா அம்பானி அல்லது அதானி அறக்கட்டளையின் தலைவர் பிரீதி அதானி ஆகியோரே அதிக நன்கொடை அளிப்பவர்கள் என மக்கள் நம்பி வரும் காலகட்டத்தில், 2023ல் ரோகினி நிலேகனி மொத்தமாக ரூ 170 கோடி […]