புலம்பெயர்ந்த இலங்கையர்களின் வசதிக்காக விமான நிலையத்தில் விசேட கருமபீடம் திறக்கப்படவுள்ளது

புலம்பெயர்ந்த இலங்கையர்களின் வசதிக்காக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட கருமபீடம் ஒன்று திறக்கப்படவுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் வெளிநாடுகளுக்குச் செல்லும் புலம்பெயர்ந்த இலங்கையர்கள் தங்களுடைய பணிகளை எவ்வித இடையூறும் இன்றி உடனடியாக மேற்கொள்வதற்கு இந்த கருமபீடம் ஊடாக முடியும் என திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை, மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் கூடிய லங்கா ரெமிட் அப்ளிகேஷன் இன்று வெளிநாட்டில் பணியாற்றும் இலங்கையர்களுக்கு அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. இந்த செயலியின் […]
நல்லூர் கந்தன் ஆலய தேர்த் திருவிழா

யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் தேர்த்திருவிழா இன்று காலை இடம்பெற்றது. இன்று காலை 6.15 அளவில் இடம்பெற்ற வசந்த மண்டபப் பூஜையைத் தொடர்ந்து, சண்முகப்பெருமான் தேரில் எழுந்தருளி அடியார்களுக்கு அருள் பாலித்தார். தேர்த்திருவிழாவில் பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். அதிகாலை முதல் ஆலயத்தின் நாலா புறத்திலிருந்தும் பக்தர்கள் வருகை தந்தனர். அடியார்கள் அங்கப் பிரதட்சணம் செய்தும் அடி அழித்தும் நேர்த்திக் கடன்களை நிறைவேற்றியதுடன், நூற்றுக் கணக்கான காவடிகளும் வருகை தந்திருந்தன. நல்லூர் கந்தசுவாமி ஆலய […]
இலங்கையில் உள்ள தமது குடிமக்களை எச்சரிக்கும் இந்தியா!

இலங்கையில் இருக்கும் இந்திய குடிமக்கள் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருக்குமாறு இந்திய வெளியுறவு அமைச்சகம் வியாழக்கிழமை அறிவுறுத்தியுள்ளது. புதுடெல்லியில் இன்று செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய வெளியுறவுத்துறையின் பேச்சாளர் அரிந்தம் பாக்சி இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளார். இலங்கையில் இந்தியர்களின் பாதுகாப்பை பாதிக்கும் சம்பவங்கள் குறித்து இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம் இலங்கையில் உள்ள உள்ளூர் அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ளது. இது தொடர்பாக இந்திய குடிமக்களுக்கு வழிகாட்டுதலை வழங்கியுள்ளதாக பாக்சி தெரிவித்துள்ளார். இந்திய குடிமக்கள் இலங்கையில் இருக்கும்போது கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருக்கவேண்டும். […]
இணையத்தை கலக்கும் தோசை பிரிண்டர்!

பிளாக் அண்ட் வைட், கலர் பிரின்டர், ஃபோட்டோ பிரின்டர் எல்லாம் தெரியும்… தோசை பிரின்டர் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? தற்போது இணையத்தை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ள புதிய விஷயம் மொறுமொறுப்பான தோசைகளை அச்சடித்துக் கொடுக்கும் தோசா பிரின்ட்டர் தான்! ஆரம்ப காலங்களில் ஒரு உணவை சமைக்க வேண்டும் என்றால், அதன் செயல்முறைக்குத் தேவையான பொருட்களைத் தயார்செய்வதிலிருந்து நமக்கு நேரம் அதிகம் செலவாகும். உணவை சமைத்து, சாப்பிட்ட பிறகு, பாத்திர பண்டங்களை சுத்தம் செய்வது இன்னொரு வேலை. காலங்கள் மாற, தொழில்நுட்பங்களின் […]
அதிக விலைக்கு விற்ற வர்த்தகருக்கு ஒரு லட்சம் ரூபா அபராதம்

அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு முட்டைகளை விற்பனை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட காலி பிரதேச வர்த்தகர் ஒருவருக்கு ஒரு இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. காலி நகரில் முட்டைக் கடை ஒன்றின் வர்த்தகர் ஒருவருக்கு 43 ரூபாவிற்கு விற்க வேண்டிய முட்டை ஒன்றை 54 ரூபாவிற்கு விற்றதாக நுகர்வோர் அதிகார சபை அவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்திருந்தனர். இது தொடர்பான வழக்கு காலி பிரதான நீதவான் பவித்ரா சஞ்சீவனி பத்திரன முன்னிலையில் இன்று […]
டைல்கள்,கட்டுமானப் பொருட்களின் இறக்குமதி மீதான தடை தளர்த்தப்பட்டுள்ளது

கட்டுமானத் தொழிலுக்குத் தேவையான டைல்கள், பல மூலப்பொருட்கள் மற்றும் உபகரணங்களை சில நிபந்தனைகளின் கீழ் இறக்குமதி செய்வதற்கு அனுமதியளிக்கும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் சில இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்தி வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, அடுக்குமாடி குடியிருப்புத் திட்டங்கள், கலவை மேம்பாட்டுத் திட்டங்கள், முதலீட்டுச் சபையுடன் இணைக்கப்பட்ட திட்டங்களைத் தவிர அரசாங்கத் திட்டங்கள் ஆகியவற்றிற்குத் தேவையான மூலப்பொருள், உபகரணங்கள் மற்றும் இயந்திரங்கள் இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படும். எவ்வாறாயினும், அத்தகைய பொருட்களை […]
சடலத்தை சுற்றி நின்று புன்னகையுடன் போட்டோ எடுத்த உறவுகள்

கேரளா மல்லப்பள்ளி பகுதியைச் சேர்ந்த 95 வயதான மர்யாம்மா கடந்த புதன்கிழமை மரணம் அடைந்தார். அவரது உடல் ஃபிரீஸர் பொக்ஸில் வைக்கப்பட்டிருந்தது. மர்யாம்மாவின் உடலை நடுவில் வைத்து அவரின் குடும்பத்தினர் அனைவரும் சுற்றி நின்று புன்னகையுடன் குரூப் போட்டோ எடுத்துக்கொண்டனர். அந்த போட்டோ சமூக வலைதளங்களில் வைரலானதுடன், எதிர்மறையான கருத்துகள் அதிக அளவில் பகிரப்பட்டன. ‘நடுவில் வைத்திருப்பது பிறந்தநாள் கேக் இல்லை என யாராவது சொல்லிப் புரியவையுங்கள்’ என்றும், ‘இதென்ன கொமெடி ஷோ-வா’ எனவும், ’மரண வீட்டில் […]