புலம்பெயர்ந்த இலங்கையர்களின் வசதிக்காக விமான நிலையத்தில் விசேட கருமபீடம் திறக்கப்படவுள்ளது

புலம்பெயர்ந்த இலங்கையர்களின் வசதிக்காக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட கருமபீடம் ஒன்று திறக்கப்படவுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன் மூலம் வெளிநாடுகளுக்குச் செல்லும் புலம்பெயர்ந்த இலங்கையர்கள் தங்களுடைய பணிகளை எவ்வித இடையூறும் இன்றி உடனடியாக மேற்கொள்வதற்கு இந்த கருமபீடம் ஊடாக முடியும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் கூடிய லங்கா ரெமிட் அப்ளிகேஷன் இன்று வெளிநாட்டில் பணியாற்றும் இலங்கையர்களுக்கு அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

இந்த செயலியின் பயன்பாடு முறைசாரா வழிகளில் வெளிநாட்டுப் பணம் இலங்கைக்கு அனுப்பப்படுவதைக் குறைக்க உதவும் என இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் பேச்சாளரும் பிரதிப் பொது முகாமையாளருமான காமினி செனரத் யாப்பா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் வெளிநாடு வாழ் இலங்கையர்களுக்கு இன்று இலங்கை மத்திய வங்கியின் ஆளுநரால் அறிவிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

  • புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com
  • இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com
  • யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com