யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் தேர்த்திருவிழா இன்று காலை இடம்பெற்றது.
இன்று காலை 6.15 அளவில் இடம்பெற்ற வசந்த மண்டபப் பூஜையைத் தொடர்ந்து, சண்முகப்பெருமான் தேரில் எழுந்தருளி அடியார்களுக்கு அருள் பாலித்தார்.
தேர்த்திருவிழாவில் பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
அதிகாலை முதல் ஆலயத்தின் நாலா புறத்திலிருந்தும் பக்தர்கள் வருகை தந்தனர்.
அடியார்கள் அங்கப் பிரதட்சணம் செய்தும் அடி அழித்தும் நேர்த்திக் கடன்களை நிறைவேற்றியதுடன், நூற்றுக் கணக்கான காவடிகளும் வருகை தந்திருந்தன.
நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்தின் சப்பறதத் திருவிழா நேற்று (24) மாலை நடைபெற்றது.
அத்துடன், நல்லூர் கந்தசுவாமி கோவிலின், புனருத்தாபனம் செய்யப்பட்ட சித்திரத்தேர் வெள்ளோட்டம் நேற்று காலை இடம்பெற்றது.
நல்லூர் மகோற்சவ திருவிழாவின் தேர்த்திருவிழா இன்று இடம்பெற்றதுடன், நாளை வெள்ளிக்கிழமை தீர்த்த திருவிழா நடைபெறவுள்ளது.
- புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com
- இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com
- யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com