செப்டம்பருக்கு பின் அரிசி விலை கிலோ 290 ரூபாவாக உயரும்

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதல் ஒரு கிலோ அரிசியை 290 ரூபாவுக்கு விற்பனை செய்ய வேண்டும் என பாரிய ஆலை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். இளவேனிற் காலத்தில் ஒரு கிலோ நெல் 140 ரூபா தொடக்கம் 150 ரூபா வரையிலான விலைக்கு கொள்வனவு செய்ய வேண்டியிருப்பதனால் ஒரு கிலோ நெல்லின் விலையை விட இரு மடங்காக அரிசியை விற்பனை செய்ய வேண்டியுள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். மின்சாரக் கட்டணம், போக்குவரத்துக் கட்டணம் அதிகரிப்பதால் அரிசியின் விலையை உயர்த்த வேண்டிய நிலை […]

இன்றைய நாணய மாற்று வீதம்

அமெரிக்க டொலரின் இன்றைய விற்பனை விலை ரூ.369.01 என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. டொலரின் மதிப்பு கடந்த ஓகஸ்ட் 23 செவ்வாய்க்கிழமை ரூபா 368.7 சதமாக இருந்தது. ஏனைய வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபா சற்று ஏற்ற இறக்கம் கண்டுள்ளது. புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com

அமெரிக்காவிலிருந்து இலங்கைக்கு 320 மெட்ரிக் தொன் கொண்டைக்கடலை நன்கொடை

இலங்கையில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு உணவளிக்க அமெரிக்கா 320 மெட்ரிக் தொன் கொண்டைக்கடலையை நன்கொடையாக வழங்கியுள்ளது. அமெரிக்காவின் விவசாயத் திணைக்களத்தின் ஊடாக Save the Children நிறுவனத்துடன் இணைந்து இன்று இந்த உணவுப் பொருட்கள் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவிடம் கையளிக்கப்பட்டதாக கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் அறிவித்துள்ளது. “இலங்கை சுதந்திரம் பெற்ற பின்னர் ஏற்பட்டுள்ள மோசமான பொருளாதார நெருக்கடியை சமாளிக்க அனைத்து இலங்கையர்களுக்கும் உதவுவதற்கான அமெரிக்காவின் அர்ப்பணிப்புக்கு ஒவ்வொரு சத்தான உணவும் சான்றாக இருக்கும்” என […]

ரஞ்சன் ராமநாயக்க விடுதலை, வரவேற்க சென்ற சஜித் பிரேமதாச

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க ஜனாதிபதியின் பொது மன்னிப்பை பெற்று வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்து வெளியேறியுள்ளார். ரஞ்சனை வரவேற்க சென்ற சஜித் பிரேமதாச. ஜனாதிபதி பொது மன்னிப்பில் இன்று விடுதலையான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை வரவேற்க எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச உட்பட ஐக்கிய மக்கள் சக்தியின் பாரா ளுமன்ற உறுப்பினர்கள் பலர் வெலிக்கடை சிறைச்சாலைக்கு அருகில் சென்றிருந்ததுடன், ரஞ்சனின் ஆதரவாளர்கள் பலர் வருகை தந்திருந்தனர். புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் […]

நல்லூர் நகர் பகுதிகளில் விற்பனையில் ஈடுபட்ட 6 சிறுவர், 3 பெண்கள், கைது

நல்லூர் நகர் பகுதிகளில் ஊதுபத்தி விற்பனையில் ஈடுபட்ட 3 பெண்கள், ஆண் ஒருவர் மற்றும் அவர்களை வேலைக்கு அமர்த்திய விடுதி உரிமையாளர் ஆகிய ஐவரை எதிர்வரும் 9 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதவான் உத்தரவிட்டுள்ளார். அதேவேளை இவர்களிடம் இருந்து கைக்குழந்தை ஒன்றும் ஆறு சிறுவர்களும் மீட்கப்பட்டுள்ளனர். அதில் கைக்குழந்தையை தாயுடன் இருக்க அனுமதித்த நீதவான் ஏனைய 6 சிறுவர்களையும் சிறுவர் பாதுகாப்பு உத்தியோகஸ்தர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர். நல்லூர் ஆலய சூழல் மற்றும் யாழ்ப்பாண நகர் […]

இறக்குமதி கட்டுப்பாட்டால் சுற்றுலாத்துறை பாதிக்கும்?

மலசலகூடங்களில் பயன்படுத்தும் கடதாசி மற்றும் அதனுடன் தொடர்புடைய பொருட்களுக்குத் தேவையான மூலப்பொருட்களை இறக்குமதி செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளதால், விரைவில் பேரழிவு நிலை உருவாகலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. சுற்றுலாத் துறைக்கு மலசலகூட கடதாசி என்பது மற்றுமொரு முக்கியமான பொருளாகும். மேலும் இந்தத் துறையை வலுப்படுத்தும் முயற்சியில் அதன் மீது கட்டுப்பாடுகளை விதிப்பது சிக்கலானது என அந்தத் துறையிலுள்ள வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். சுற்றுலா ஹோட்டல்கள், மருத்துவமனைகள் மற்றும் விமானங்களுக்கு மலசலகூட கடதாசி என்பது அவசியமான பொருளாகும். எனவே அதன் […]

இலங்கைக்கான பயண அறிவுறுத்தலை நீக்கிய பிரித்தானியா,நோர்வே, பிரான்ஸ்,சுவிஸ்!

பிரித்தானிய அரசாங்கம், இலங்கைக்கான பயண ஆலோசனையை இன்று நீக்கியுள்ளது. இலங்கைக்கு மேற்கொள்ளும் அத்தியாவசிய பயணங்களைத் தவிர ஏனைய பயணங்களுக்கு எதிராக இனி அறிவுறுத்தல்களை விடுப்பதில்லை என்றும் அந்த அரசாங்கம் அறிவித்துள்ளது. இதேவேளை நோர்வே, பிரான்ஸ், சுவிட்ஸர்லாந்து ஆகிய நாடுகளும் இலங்கைக்கான பயண அறிவுறுத்தல்களை நீக்கியுள்ளன. முன்னதாக குறித்த நாடுகள், இலங்கைக்கான அத்தியாவசிய பயணங்களைத் தவிர மற்ற அனைவருக்கும் பயண ஆலோசனைகளை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com இலங்கையில் இணையம் ஊடாக […]