இணையத்தை கலக்கும் தோசை பிரிண்டர்!

பிளாக் அண்ட் வைட், கலர் பிரின்டர், ஃபோட்டோ பிரின்டர் எல்லாம் தெரியும்… தோசை பிரின்டர் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

தற்போது இணையத்தை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ள புதிய விஷயம் மொறுமொறுப்பான தோசைகளை அச்சடித்துக் கொடுக்கும் தோசா பிரின்ட்டர் தான்!

ஆரம்ப காலங்களில் ஒரு உணவை சமைக்க வேண்டும் என்றால், அதன் செயல்முறைக்குத் தேவையான பொருட்களைத் தயார்செய்வதிலிருந்து நமக்கு நேரம் அதிகம் செலவாகும். உணவை சமைத்து, சாப்பிட்ட பிறகு, பாத்திர பண்டங்களை சுத்தம் செய்வது இன்னொரு வேலை.

காலங்கள் மாற, தொழில்நுட்பங்களின் வளர்ச்சி, மனிதனின் வேலையை எளிமையாக்கி கொண்டே வந்தது. விறகு அடுப்புகள் கேஸ் அடுப்புகளாக மாறின. எலெக்ட்ரிக் குக்கர் முதல் டிஷ் வாஷர் வரை, ஒரு வீட்டின் கிச்சனை மொடர்னாகவும், சமைப்பவர்களின் பளுவை குறைக்கவும், தொழில்நுட்பங்கள் கைகொடுத்திருக்கிறது. அந்த வகையில், தற்போது இந்த பட்டியலில் இணைந்துள்ளது, தோசைகளை அச்சடிக்கும் Dosa Printer.

இந்த இயந்திரம், மொறுமொறுப்பான தோசைகளை அச்சடித்து தருகிறது. சமந்தா என்ற பெண் தனது டிவிட்டர் பக்கத்தில் தோசை பிரின்ட்டரின் வீடியோ ஒன்றை பகிர்ந்திருந்தார்.
முதலிலும் அந்த இயந்திரத்தில் தோசை மாவை ஊற்றுகிறார். பின்னர், எவ்வளவு நேரம் சமைக்கவேண்டும் என்பதற்கு டைமிங் செட் செய்ய வேண்டும். எவ்வளவு அதிக நேரத்தை செட் செய்கிறோமோ, அவ்வளவு மொறுமொறுப்பான தோசை கிடைக்கும்.
பின்னர், தோசையின் கனம் (thickness) எவ்வளவு வேண்டும் என்பதையும் செட் செய்துகொள்ளலாம். அதற்குப் பின்னர், எவ்வளவு தோசைகள் வேண்டும் என்பதையும் நாம் அந்த இயந்திரத்தில் கொடுத்துவிட்டால், தோசை பிரின்ட் ஆகி வெளிவரும். நாம் அருகிலிருந்து பார்த்துகொள்ள தேவையில்லை. மேலும், இதில் வெண்ணெய், நெய், எண்ணை, சீஸ் என எதை வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வீடியோவை சமந்தா என்ற பெண் டிவிட்டரில் பதிவிட்டதிலிருந்து இந்த இயந்திரத்தால் பலரும் ஈர்க்கப்பட்டுள்ளனர். மேலும் நகைச்சுவையான பல கமென்ட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.

  • புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com
  • இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com
  • யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com
சிறப்புச் செய்திகள்