சடலத்தை சுற்றி நின்று புன்னகையுடன் போட்டோ எடுத்த உறவுகள்

கேரளா மல்லப்பள்ளி பகுதியைச் சேர்ந்த 95 வயதான மர்யாம்மா கடந்த புதன்கிழமை மரணம் அடைந்தார். அவரது உடல் ஃபிரீஸர் பொக்ஸில் வைக்கப்பட்டிருந்தது. மர்யாம்மாவின் உடலை நடுவில் வைத்து அவரின் குடும்பத்தினர் அனைவரும் சுற்றி நின்று புன்னகையுடன் குரூப் போட்டோ எடுத்துக்கொண்டனர். அந்த போட்டோ சமூக வலைதளங்களில் வைரலானதுடன், எதிர்மறையான கருத்துகள் அதிக அளவில் பகிரப்பட்டன. ‘நடுவில் வைத்திருப்பது பிறந்தநாள் கேக் இல்லை என யாராவது சொல்லிப் புரியவையுங்கள்’ என்றும், ‘இதென்ன கொமெடி ஷோ-வா’ எனவும், ’மரண வீட்டில் […]
இன்றைய நாணய மாற்று விகிதம்

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட (25.08.2022) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு: புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com
கடலை இறக்குமதி நிறுத்தம்

இதுவரை ஜம்போ வேர்க்கடலை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு வந்தது. எனினும் இப்போது இலங்கையில் ஜம்போ வேர்க்கடலை வகைக்கு மாற்று வகை இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கை ஜம்போ எனப்படும் மாற்று வகை கடலை இறக்குமதி செய்யப்படும் கடலையை விட தரத்தில் உயர்வானது என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. எனவே இனிமேல் கடலையை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியமில்லை என விவசாய, வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். நம் நாட்டில் நிலக்கடலையின் ஆண்டுத் […]
இன்றைய நாணய மாற்று விகிதம்

இலங்கை மத்திய வங்கியின் இன்றைய ( ஒகஸ்ட் 24 ) நாளுக்கான நாணய மாற்று விகித அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதன்படி, இன்று அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 357 ரூபா 40 சதமாகவும், அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 368 ரூபா 71 சதமாகவும் பதிவாகியுள்ளது. இதேவேளை, மற்ற வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாயின் பெறுமதியில் சற்று ஏற்ற, இறக்கம் காணப்படுகின்றது. ஸ்டெர்லிங் பவுண்ட் ஒன்றின் விற்பனை விலை 437 ரூபா 01 சதமாகவும் […]
இலங்கை பணவீக்கம் அதிகம் உள்ள நாடுகளில் ஒன்றாக இருப்பது வருத்தமளிக்கிறது

உணவுப் பொருட்களின் விலையேற்றம் அதிகமாக உள்ள நாடுகளில் இலங்கை ஐந்தாவது இடத்தில் இருப்பது தொடர்பில் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர வருத்தம் தெரிவித்துள்ளார். இந்த விடயத்தினால் அரசாங்கமும் பொதுமக்களும் அதிருப்தி அடைந்துள்ளதாகவும், இந்த விடயத்திற்கு தீர்வு காண வேலைத்திட்டம் வகுக்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதனை தவிர்க்க முடியாதது என்றாலும், அதற்கு தீர்வு காண முடியும். இலங்கை அரிசி உபரியாக உள்ள நாடு என்றும், […]
கோட்டாவின் மிரிஹான வீட்டுக்கு பலத்த பாதுகாப்பு

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் மிரிஹான வீட்டுக்கு பாதுகாப்பை மேலும் பலப்படுத்துவதற்குரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த வீட்டுக்கு ஏற்கனவே பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்ட படையினரின் எண்ணிக்கையை விட, தற்போது அதிகளவான அதிரடிப் படையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ நாடு திரும்புவதற்கு மேலும் இரண்டு வாரங்கள் செல்லக்கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. கோட்டபாய ராஜபக்ஷ இன்றைய தினம் மீண்டும் நாடு திரும்புவதாக கூறப்பட்டது. ஆனபோதும் அவர் இன்று நாடுதிரும்ப மாட்டார் என […]
நாட்டின் நிதி நிலைமைகள் குறித்து மத்திய வங்கி ஆளுநர் உரை

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, இடைக்கால வரவு செலவுத் திட்டம் மற்றும் நாட்டின் நிதி நிலைமை தொடர்பில் எதிர்வரும் 30ஆம் திகதி மாலை பாராளுமன்றத்தில் அனைத்து அரசாங்க மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் விசேட உரையொன்றை ஆற்றவுள்ளார். அன்றைய தினம் பிற்பகல் 2.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை இந்த உரை இடம்பெறவுள்ளது. பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இன்று (24) முற்பகல் நடைபெற்ற பாராளுமன்ற விவகாரக் குழுக் கூட்டத்தில் எம்பிக்கள் கட்சித் […]