சடலத்தை சுற்றி நின்று புன்னகையுடன் போட்டோ எடுத்த உறவுகள்

கேரளா மல்லப்பள்ளி பகுதியைச் சேர்ந்த 95 வயதான மர்யாம்மா கடந்த புதன்கிழமை மரணம் அடைந்தார். அவரது உடல் ஃபிரீஸர் பொக்ஸில் வைக்கப்பட்டிருந்தது. மர்யாம்மாவின் உடலை நடுவில் வைத்து அவரின் குடும்பத்தினர் அனைவரும் சுற்றி நின்று புன்னகையுடன் குரூப் போட்டோ எடுத்துக்கொண்டனர். அந்த போட்டோ சமூக வலைதளங்களில் வைரலானதுடன், எதிர்மறையான கருத்துகள் அதிக அளவில் பகிரப்பட்டன.

‘நடுவில் வைத்திருப்பது பிறந்தநாள் கேக் இல்லை என யாராவது சொல்லிப் புரியவையுங்கள்’ என்றும், ‘இதென்ன கொமெடி ஷோ-வா’ எனவும், ’மரண வீட்டில் இருப்பவர்களின் முகங்களில் சந்தோஷத்தை பார்த்தீர்களா’ என்பது போலவும் கமென்ட்கள் குவிந்தன. அதே சமயம் இந்த போட்டோவை கேரள கல்வித்துறை அமைச்சர் வி.சிவன்குட்டியும் ஷேர் செய்திருந்தார்.

அமைச்சர் சிவன்குட்டி தனது முகநூல் பதிவில், “வாழ்வின் இறுதியான உண்மை மரணம் மட்டுமே. இறந்தவர்களை அழுது கொண்டே வழியனுப்பி வைப்பதைதான் சாதாரணமாக நாம் பார்க்கிறோம். மரணம் ஒரு பிரிவும், சங்கடகரமானதும் ஆகும். ஆனலும், அது ஒரு விடைபெறுவதும், வழியனுப்புவதும் ஆகும். மகிழ்ச்சியோடு வாழ்ந்தவர்களுக்கு, புன்சிரிப்போடு ஒரு வழியனுப்புதல் செய்வதைவிட சந்தோஷம் வேறு எதாவது உண்டா? இந்த போட்டோவுக்கு நெகட்டிவ் கமென்ட்கள் வேண்டாம்” என குறிப்பிட்டிருந்தார்.

சம்பந்தப்பட்ட போட்டோ விவாதத்தை ஏற்படுத்தியதை தொடர்ந்து மர்யாம்மாவின் உறவினர்கள் விளக்கம் தெரிவித்துள்ளனர். மர்யாம்மாவின் உறவினரான பாபு உம்மன் கூறுகையில், “அம்மச்சி 95 வயது வரை மகன்களோடும், மக்களோடும், மருமக்களோடும், பேரக் குழந்தைகளோடும் மிகவும் நேசத்தோடு இருந்தார். அனைவரும் அவருடைய அன்பை அனுபவித்தோம். கடந்த ஒரு வருடமாக படுத்த படுக்கையாகி விட்டார். கடந்த புதன்கிழமை மரணம் அடைந்துவிட்டார். அம்மச்சியின் நல்ல நினைவுகள் மட்டுமே எங்களுக்கு இருந்தன. அந்த மகிழ்ச்சியை நினைத்துப் பார்த்தோம். அந்த சந்தோஷத்தை நினைவாக வைத்துக் கொள்ளவே குழுவாக புகைப்படம் எடுத்துக்கொண்டோம். வைரலாவதற்காக அந்த போட்டோவை நாங்கள் எடுக்கவில்லை.
மர்யாம்மாவுக்கு ஒன்பது பிள்ளைகள். பிள்ளைகளும், மருமக்களும், பேரக்குழந்தைகளும் ஒன்றாக கிறிஸ்தவ நம்பிக்கைபடி பிரார்த்தனை செய்து கொண்டிருந்தோம். பிரார்த்தனைக்குப் பிறகு, அடக்கம் செய்வதற்கு முன்பு எடுத்த புகைப்படம்தான் அது. அதுவும் குடும்ப உறுப்பினர்கள், ‘நமக்கு ஒரு போட்டோ எடுத்து வைக்கலாம்’ என விரும்பியதால்தான் அந்த புகைப்படம் எடுக்கப்பட்டது. மற்றபடி எதிர்பாராத நேரத்தில் எடுக்கப்பட்ட போட்டோ அல்ல” என்றார்.

மேலும் மர்யாம்மாவின் குடும்ப உறுப்பினர்கள் கூறும்போது, “மரண வீட்டில் அழுகையை மட்டும் பார்த்தவர்களுக்கு இந்த போட்டோவை ஏற்றுக்கொள்ள முடியாது. அழுது எந்த பயனும் இல்லை. மீண்டும் பார்க்கலாம் எனக்கூறி வழியனுப்பி வைக்க வேண்டும். அதைத்தான் நாங்கள் செய்தோம்.

  • புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com
  • இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com
  • யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com

சிறப்புச் செய்திகள்