நாட்டை வந்தடையவுள்ள இரு எரிவாயு தாங்கிய கப்பல்கள்

எரிவாயு தாங்கிய 2 கப்பல்கள் இந்த வாரத்திற்குள் நாட்டை வந்தடையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் ஒரு கப்பல், 3700 மெட்ரிக் டன் அளவிலான சமையல் எரிவாயுடன் இன்றைய தினம் நாட்டை வந்தடையவுள்ளது.

அதேநேரம், மற்றுமொரு கப்பல் எதிர்வரும் 19ஆம் திகதி நாட்டிற்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சமையல் எரிவாயு கையிருப்பில் இல்லாமையினால் எரிவாயுக்காக மக்கள் வரிசையில் காத்திருக்க வேண்டாம் என லிட்ரோ நிறுவனம் கடந்த வாரம் அறிவித்திருந்தது.

எனினும், சமையல் எரிவாயுக்கான பணம் செலுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தமது ட்விட்டர் கணக்கில் நேற்று தெரிவித்தார்.

உடனடியாக அதனை தரையிறக்க மக்களுக்கு விநியோகிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.


⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!

🏠 “தாரணி சூப்பர்மார்கெட்” வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com


🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com


🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com

சிறப்புச் செய்திகள்