Circadian AI என்ற புரட்சிகரமான செயலியை உருவாக்கிய 14 வயது மாணவன்!

டெக்சாஸ் மாநிலம் ஃபிரிஸ்கோவில் இருந்து வந்த 14 வயது மாணவன் சித்தார்த் நண்டியாலா, “Circadian AI” என்ற புரட்சிகரமான செயலியை உருவாக்கியுள்ளார். இந்த செயலி இதயத் துடிப்பை கேட்டு, இயந்திர கற்றல் (machine learning) மூலம் 7 வினாடிகளில் இதய நோய்களின் ஆரம்ப அறிகுறிகளை கண்டறிகிறது.

அமெரிக்கா மற்றும் இந்தியாவிலுள்ள 18,500 நோயாளிகளிடம் சோதனை செய்யப்பட்ட இந்த செயலி, 96%க்கும் மேல் துல்லியத்துடன் இதய சிக்கல்களை கண்டறிந்தது. தற்போது, இது மருத்துவமனைகளில் பயிற்சி பெற்ற மருத்துவ நிபுணர்கள் பயன்படுத்துவதற்கே உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த புதுமையை உருவாக்கிய சித்தார்த், ஏற்கனவே ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனர், தேசிய அளவில் STEM துறையில் பாராட்டு பெற்றவர் மற்றும் UT Austin-ல் கணினி அறிவியல் பயிலும் மாணவர். அவரது அடுத்த இலக்கு — இதே தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நுரையீரல் நோய்களையும் கண்டறிதல்!

சிறப்புச் செய்திகள்