இலங்கைக்கு உதவி வழங்குங்கள், IMF நிதியத்திடம் இந்திய வேண்டுகோள்

இலங்கைக்கு உடனடியாக உதவி வழங்குங்கள் – சர்வதேச நாணயநிதியத்திடம்இந்திய வெளிவிவகார அமைச்சர் வேண்டுகோள்

சர்வதேச நாணயநிதியம் இலங்கைக்கு உதவி வழங்கவேண்டும் என இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சர்வதேச நாணயநிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலீனா ஜோர்ஜீவாவுடனான பேச்சுவார்த்தைகளின் போது அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

இன்று கிறிஸ்டலீனா ஜோர்ஜீவாவை சந்தித்தவேளை இலங்கையின் தற்போதைய நெருக்கடியை கருத்தில் கொண்டு சர்வதேச நாணயநிதியம் விரைவில் நிதிஉதவி வழங்கவேண்டும் என்ற இலங்கையின் கோரிக்;கையை இந்திய நிதியமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கைக்கு இந்தியா வழங்கிவரும் உதவிகள் குறித்து சுட்டிக்காட்டியுள்ள அவர் சர்வதேச நாணயநிதியம் இலங்கைக்கு ஆதரவளிக்கவேண்டும் உடனடியாக நிதியுதவியை வழங்கவேண்டும் என வேண்டுகோள்விடுத்துள்ளார்.

சர்வதேச நாணய நிதிய பிரதானியுடன் நிதியமைச்சர் சந்திப்பு

நிதியமைச்சர் அலி சப்ரி, வோஷிங்டனில் உள்ள IMF தலைமையகத்தின் IMF முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவாவை நேற்று (18) சந்தித்தார்.

ஒரு நிலையான தீர்வை அடைவதில் இலங்கையுடன் இணைந்து பணியாற்ற IMF சாதகமாக உள்ளதாக இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் நிலைமையைத் தணிக்க நிதியமைச்சர் ஏற்கனவே எடுத்துள்ள நடவடிக்கைகளை IMF பாராட்டியதாகவம் அறியமுடிகிறது.

மேலும், இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) பற்றிய கலந்துரையாடல்கள் குறித்தும் இந்த சந்திப்பில் விவாதிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்துடன் இடம்பெறவிருந்த குறித்த கலந்துரையாடலுக்காக நிதியமைச்சர் அலிசப்ரி தலைமையிலான குழுவினர் நேற்று முன்தினம் (17) வோஷிங்டன் நோக்கி பயணமாகி இருந்தனர்.

மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க மற்றும் நிதியமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன உள்ளிட்ட குழுவினரே இவ்வாறு பயணமாகினர்.

இந்நிலையில் சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடல் நேற்றைய தினம் ஆரம்பமானது.

இதில் சர்வதேச நாணய நிதியம், 3 பில்லியன் அமெரிக்க டொலரை கடனாக வழங்கும் என எதிர்ப்பார்ப்பதாக மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க முன்னராக நம்பிக்கை வெளியிட்டிருந்த நிலையில், நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் பிரகாரம், இலங்கையுடன் இணைந்து பணியாற்ற IMF சாதகமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com

யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!

🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com

📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்

🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com

சிறப்புச் செய்திகள்