முட்டை விற்பதில் சிக்கல்

உச்சபட்ச சில்லறை விலைக்கு, தங்களது உற்பத்திகளை வழங்குவதில், சிக்கல் உள்ளதாக முட்டை உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், முட்டைக்கு உச்சபட்ச சில்லறை விலையை நிர்ணயித்து, நுகர்வோர் விவகார அதிகார சபையினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது.

இதன்படி, வெள்ளை முட்டை ஒன்றின் உச்சபட்ச சில்லறை விலை 43 ரூபாவாகவும், சிவப்பு முட்டை ஒன்றின் உச்சபட்ச சில்லறை விலை 45 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த நிர்ணய விலையை விட அதிக விலைக்கு முட்டைகளை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

எனினும், அரசாங்கம் அறிவித்தாலும், சந்தையில் விலை குறைவடையவில்லை என வர்த்தகர்களும், நுகர்வோரும் தெரிவிக்கின்றனர்.

வர்த்தக நிலையங்களில், 50, 60 ரூபா அளவிலேயே முட்டை ஒன்று விற்பனை செய்யப்படுகின்றது.

அமைச்சர் விலையைக் குறைத்தாலும், வர்த்தகர்கள் விலையைக் குறைக்கவில்லை என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்

  • புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com
  • இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com
  • யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com
சிறப்புச் செய்திகள்