எதிர்வரும் 2 நாட்களில் எரிபொருள் வரிசையை குறைப்பு

நாடளாவிய ரீதியாக இடம்பெறும் எரிபொருள் விநியோகம் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

தமது ட்விட்டர் கணக்கில் அவர் இதனைப் பதிவிட்டுள்ளார்.

சகல எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் மேலதிகமாக எரிபொருளை வழங்குமாறு குறித்த கலந்துரையாடலில் அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அவர் தமது பதிவில் தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விநியோகத்தில் ஏற்பட்ட தொய்வு, தரையிறக்குவதில் தாமதம் மற்றும் எரிபொருள் நிரப்பு நிலையங்களின் முன்பதிவுகளுக்கான கட்டண தாமதம் என்பன காரணமாக எரிபொருளுக்காக நீண்ட வரிசை உருவாகியுள்ளதாக வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில் எதிர்வரும் 2 நாட்களில் எரிபொருள் வரிசையை குறைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.

  • புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com
  • இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com
  • யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com
சிறப்புச் செய்திகள்