இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலையை அதிகரிக்க இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.
இதன்படி, ஒரு லீற்றர் மண்ணெண்ணெயின் விலை 253 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது.
அதற்கமைய, மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் புதிய விலை 340ஆக அதிகரிக்கப்படவுள்ளது.
மண்ணெண்ணெய் விலை அதிகரிப்பால் பாதிக்கப்படும் சில தரப்புக்கு நிதி நிவாரணம்!
மண்ணெண்ணெய்யை விலை அதிகரிப்பால் பாதிக்கப்படும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள், மீன்பிடி மற்றும் பெருந்தோட்டத் துறைகளுக்கு, அதற்கு இணையாக நேரடி நிதி நிவாரணத்தை வழங்க அரசாங்கம் முன்வந்துள்ளது.
மின்சக்தி வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர ட்விட்டர் பதிவொன்றின் மூலம் இதனைத் தெரிவித்துள்ளார். மண்ணெண்ணெய் விலைத் திருத்தத்துக்கான அவசியம் பல ஆண்டுகளாக நிலவி வந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன், மானிய விலையில் மண்ணெண்ணெய் விற்பனை செய்யப்பட்டமை பெற்றோலிய கூட்டுத்தாபனம் நட்டமடைவதற்குரிய ஒரு காரணியாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் நேற்று (21) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலையை 87 ரூபாவில் இருந்து 340 ரூபாவாக அதிகரித்துள்ளது.
இதன்படி, மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை, பழைய விலையிலிருந்து 253 ரூபாவினால் அதிகரித்துள்ளது.
இலங்கை வரலாற்றில் மண்ணெண்ணெய் விலையில் ஏற்பட்ட அதிகூடிய அதிகரிப்பாக இது பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
- புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com
- இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com
- யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com