டிசம்பரில் IMF நிதி!

வெற்றிகரமான கடன் மறுசீரமைப்பு இடம்பெற்றால், சர்வதேச நாணய நிதியத்தின் நிதிவழங்கல் எதிர்வரும் டிசம்பர் மாதம் ஆரம்பமாகும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். கடன் வழங்கும் காலத்திட்டம் உடன்படிக்கைக்கு அமைய தீர்மானிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சர்வதேச நிதியம் தொடர்பான அதிகாரிகள் மட்டத்திலான ஒப்பந்தம் மற்றும் வெளிநாட்டு கடனளிப்பாளர்களுடனான பேச்சுவார்த்தைகள் வெற்றியளிக்கும் பட்சத்தில் இலங்கைக்கான நிதிகளை பெற முடியும் எனவும் இலங்கை […]
பொதுப்போக்குவரத்தில் இணையும் மின்சார பேருந்துகள்!

மின்சாரத்தில் இயங்கும் முச்சக்கர வண்டி மற்றும் பேருந்துகளை நாட்டின் போக்குவரத்தில் இணைப்பதற்காக ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி வேலைத்திட்டம் பூரண ஒத்துழைப்பை வழங்கவுள்ளது. இது தொடர்பான முதற்கட்ட கலந்துரையாடல் ஐக்கிய நாடுகளின் அபிருத்திக்கான வேலைத்திட்டத்துடன் போக்குரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தலைமையில் நேற்று இடம்பெற்றுள்ளது. நாட்டில் உள்ள 10 லட்சத்துக்கும் அதிகமான முச்சக்கர வண்டிகளை மின்சாரத்தில் இயங்கும் கட்டமைப்புக்கு மாற்றம் செய்வதன் ஊடாக எரிபொருள் பிரச்சினைக்கு தீர்வு ஏற்படுவதுடன் பயணிகளுக்கு இலகுவான கட்டணத்தில் போக்குவரத்து செய்ய முடியும் என்பதே […]
குத்தகை, கடன் செலுத்த முடியாத நிலையில் 25 இலட்சம் வாடிக்கையாளர்கள்

25 லட்சத்துக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் குத்தகை மற்றும் வங்கி கடன்களை செலுத்த முடியாத நிலைக்கு உள்ளாகியுள்ளனர். குத்தகை மற்றும் கடன் தவணை செலுத்துனர்கள் சங்கத்தின் தலைவர் அசங்க ருவன் பொத்துபிட்டிய இதனைத் தெரிவித்துள்ளார். 20,000 ரூபாவாகவிருந்த குத்தகை கட்டணம் தற்போது 32, 000 ரூபாவாக மாற்றம் பெற்றுள்ளது. அரச சேவையாளர்களுக்கு வங்கியில் வைப்பிலிடப்படும் வேதனம் வங்கியால் கடனுக்காக வசூலிக்கப்படுகின்றது. இதன்காரணமாக அரச சேவையாளர்கள் தற்போது பாரிய நெருக்கடிகளை சந்தித்துள்ளனர். வாகனங்கள் விபத்துக்குள்ளானால் அதற்கான நட்டஈடுகளை காப்புறுதி நிறுவனங்கள் […]
ஆடை ஏற்றுமதி துறைக்கு 3 பில்லியன் டொலர் வருமானம்

வருடத்தின் முதல் ஏழு மாதங்களில் இலங்கையின் ஆடைத் துறையின் ஏற்றுமதி வருமானம் 3 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடந்துள்ளது. கூட்டு ஆடை கைத்தொழிற்சங்க பேரவை (Joint Apparel Association Forum) வெளியிட்ட தரவுகளின்படி, இந்த ஆண்டின் ஜனவரி முதல் ஜூலை வரையான காலப்குதிக்கான ஆடை ஏற்றுமதி வருவாய் மொத்தம் 3.31 பில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது. இது 2021 ஆம் ஆண்டின் முதல் 7 மாதங்களுடன் ஒப்பிடுகையில், 3.53 சதவீதம் அதிகமாகும். அதற்கமைய, அமெரிக்காவிற்கான ஏற்றுமதிகள் மொத்தம் […]
12 அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு!

லங்கா சதொச, 12 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைத்துள்ளது. இன்று (23) முதல் அமுலாகும் வகையில் இந்த விலை குறைப்பு அமுலாகவுள்ளது. அதற்கமைய, பெரிய வெங்காயம் கிலோவொன்றின் விலையை 40 ரூபாவினால் குறைத்துள்ளது. அதன் புதிய விலை 180 ரூபாவாகும். அத்துடன், பொன்னி சம்பா அரிசி கிலோவொன்றின் விலை 31 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 194 ரூபாவாகும். அவ்வாறே, உருளைக்கிழங்கு (இறக்குமதி) கிலோவொன்றின் விலை 40 ரூபாவினால் குறைக்கப்பட்டு, 280 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது. […]
எரிபொருள் விநியோகம் தொடர்பான புதிய தீர்மானங்கள்!

தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரம் தொடர்பான ஆய்வு கூட்டம் இன்று காலை இணையவழியாக நடைபெற்றது. அதில் எரிபொருள் விநியோகம் தொடர்பான சில புதிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன. வாகனம் அல்லாத எரிபொருள் தேவைக்கான பதிவுகள், அடுத்த மாதத்தின் முதல் வாரத்தில் ஆரம்பமாகும் என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். சுற்றுலா பயணிக்களுக்கான எரிபொருள் அட்டையும் வழங்கப்படுவதாக அமைச்சர் தெரிவித்தார். அத்துடன், அத்தியாவசிய சேவைகளுக்காக விசேட பிரிவுகளின் கீழ் மேலதிக எரிபொருள் ஒதுக்கம் அறிமுகப்படுத்தப்படுவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். புலத்தையும் […]
இலங்கை IMF பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை!

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று இன்று (23) இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது. இந்தக் குழு நாளை (24) இலங்கை அரசாங்கத்துடன் தொழில்நுட்ப பேச்சுவார்த்தையை ஆரம்பிக்கவுள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான சிரேஷ்ட தூதுக்குழுவின் பிரதானி பீட்டர் ப்ரூவர் மற்றும் அதன் இலங்கையின் விவகாரத்துக்கான தலைவர் மசிரோ நோசாகி ஆகியோர் இந்த குழுவிற்கு தலைமை தாங்குகின்றனர். எதிர்வரும் 31ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருக்கும் சர்வதேச நாணய நிதியத்தின் […]