கோட்டாவின் மிரிஹான வீட்டுக்கு பலத்த பாதுகாப்பு

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் மிரிஹான வீட்டுக்கு பாதுகாப்பை மேலும் பலப்படுத்துவதற்குரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த வீட்டுக்கு ஏற்கனவே பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்ட படையினரின் எண்ணிக்கையை விட, தற்போது அதிகளவான அதிரடிப் படையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ நாடு திரும்புவதற்கு மேலும் இரண்டு வாரங்கள் செல்லக்கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. கோட்டபாய ராஜபக்ஷ இன்றைய தினம் மீண்டும் நாடு திரும்புவதாக கூறப்பட்டது. ஆனபோதும் அவர் இன்று நாடுதிரும்ப மாட்டார் என […]
நாட்டின் நிதி நிலைமைகள் குறித்து மத்திய வங்கி ஆளுநர் உரை

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, இடைக்கால வரவு செலவுத் திட்டம் மற்றும் நாட்டின் நிதி நிலைமை தொடர்பில் எதிர்வரும் 30ஆம் திகதி மாலை பாராளுமன்றத்தில் அனைத்து அரசாங்க மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் விசேட உரையொன்றை ஆற்றவுள்ளார். அன்றைய தினம் பிற்பகல் 2.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை இந்த உரை இடம்பெறவுள்ளது. பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இன்று (24) முற்பகல் நடைபெற்ற பாராளுமன்ற விவகாரக் குழுக் கூட்டத்தில் எம்பிக்கள் கட்சித் […]
இலங்கை தனது சர்வதேச வாக்குறுதிகளுக்கு இணங்க வேண்டும் -சுவிட்சர்லாந்து

இலங்கை தனது சர்வதேச வாக்குறுதிகளுக்கு இணங்க வேண்டும் என சுவிட்சர்லாந்து தெரிவித்துள்ளது. இலங்கையில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் அதே வேளையில், மக்களின் கருத்துச் சுதந்திரம் மற்றும் ஜனநாயக உரிமைகளைப் பயன்படுத்துதல் போன்றவற்றையும் இலங்கை அரசாங்கம் பாதுகாக்க வேண்டும் என இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதுவர் டொமினிக் ஃபர்க்லர் தெரிவித்துள்ளார். அண்மைய கைதுகளின் போது பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தைப் பயன்படுத்துவது குறித்து சுவிட்சர்லாந்து கவலை கொண்டுள்ளது என்றும், செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை அமர்வுக்கு […]
இலங்கைக்கு டொலர் வழங்க தயாராகும் புலம்பெயர் தமிழர் அமைப்பு

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியை தீர்ப்பதற்கான அந்நிய செலாவணியை வழங்குவதற்குத் தயாராக இருப்பதாக, உலகத் தமிழர் பேரவை தெரிவித்துள்ளது. இதற்கான சட்டஏற்பாடுகளை நாடாளுமன்றில் நிறைவேற்றுமாறு அந்த அமைப்பின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் தெரிவித்துள்ளார். முன்னைய அரசாங்கத்தினால் உலகத் தமிழர் பேரவை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் மற்றும் தனி நபர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை அண்மையில் நீக்கப்பட்டது. ஜெனீவா மனித உரிமை பேரவையின் மாநாடு அடுத்தமாதம் ஆரம்பமாகவுள்ள நிலையில், அதனை சமாளிக்கும் நோக்கிலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தாம் கருதுவதாக […]
சந்தையில் கோழி இறைச்சி விலையில் வீழ்ச்சி

சந்தையில் கோழி இறைச்சியின் விலையில் வீழ்ச்சியும், முட்டைக்கு தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை கோழிப் பண்ணையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. அதன் தலைவர் ஆர்.எம்.ரத்நாயக்க கூறுகையில், முட்டைக் கட்டுப்பாட்டு விலையில் ஏற்பட்டுள்ள சிக்கல் காரணமாக முட்டை உற்பத்தி செய்யும் விவசாயிகள் கோழிகளை விற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சந்தையில் ஒரு கிலோ கோழி இறைச்சியின் விலை 700 ரூபா வரை குறைந்துள்ளதாக அவர் தெரிவித்தார். சந்தையில் முட்டையின் பல்வேறு விலைகள் காரணமாக, முட்டைக்கான கட்டுப்பாட்டு விலையை […]
யாழ்ப்பாணத்தில் அதிகார சபையினரிடம் சிக்கிய வர்த்தகர்கள்!

யாழ்ப்பாணத்தில் அதிக விலைக்கு முட்டைகளை விற்பனை செய்த மூன்று வர்த்தகர்களுக்கு எதிராக யாழ்.மாவட்ட பாவனையாளர் அதிகார சபையினரால் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கோழி முட்டைகளுக்கான கட்டுப்பாட்டு விலை வர்த்தமானி அறிவித்தல் ஊடாக வெளியிடப்பட்டுள்ளது. அதில் வெள்ளை நிற முட்டை 43 ரூபாவும் , பழுப்பு நிற முட்டை 45 ரூபாவுக்கு விற்பனை செய்ய நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் முட்டைகளின் விலைகளை கட்டுப்பாட்டு விலைக்குள் விற்காது அதிக விலைக்கு வர்த்தகர்கள் விற்பனை செய்வதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையில் , […]
வௌிநாடு செல்ல எதிர்பார்ப்பவர்களுக்கான அறிவிப்பு

வெளிநாட்டு தொழிலுக்காக செல்வோர் விரைவில் தமது கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ள வசதியாக குடிவரவு திணைக்களத்தில் விசேட கருமபீடம் திறக்கப்பட்டுள்ளது. இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளுடன் கடந்த வாரம் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து இந்த விசேட விசேட கருமபீடத்தை திறப்பதற்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார அங்கீகாரம் அளித்திருந்தார். முன்னேடி திட்ட நடவடிக்கைகளில் இருந்து பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில், வேலைவாய்ப்புக்காக வெளிநாடு செல்ல விரும்பும் அனைத்து இலங்கையர்களுக்கும் வசதியாக நேற்று […]