12 அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு!

லங்கா சதொச, 12 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைத்துள்ளது.

இன்று (23) முதல் அமுலாகும் வகையில் இந்த விலை குறைப்பு அமுலாகவுள்ளது.

அதற்கமைய, பெரிய வெங்காயம் கிலோவொன்றின் விலையை 40 ரூபாவினால் குறைத்துள்ளது. அதன் புதிய விலை 180 ரூபாவாகும்.

அத்துடன், பொன்னி சம்பா அரிசி கிலோவொன்றின் விலை 31 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.

அதன் புதிய விலை 194 ரூபாவாகும். அவ்வாறே, உருளைக்கிழங்கு (இறக்குமதி) கிலோவொன்றின் விலை 40 ரூபாவினால் குறைக்கப்பட்டு, 280 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

விலை குறைக்கப்பட்டுள்ள ஏனைய பொருட்கள் தொடர்பான விபரம்

விலைக் குறைக்கப்பட்ட பொருட்கள் பின்வருமாறு….

* இறக்குமதி செய்யப்படும் பொன்னி சம்பா ஒரு கிலோ 194 ரூபாய்.

* ஒரு கிலோ பருப்பு 460 ரூபாய்.

* ஒரு கிலோ சிவப்பு சீனி 310 ரூபாய்.

* இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ நாட்டரிசி 198 ரூபாய்.

* ஒரு கிலோ நெத்தலி 1,375 ரூபாய் என குறிப்பிடப்பட்டுள்ளது.

  • புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com
  • இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com
  • யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com

சிறப்புச் செய்திகள்