எரிபொருள் விநியோகம் தொடர்பான புதிய தீர்மானங்கள்!

தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரம் தொடர்பான ஆய்வு கூட்டம் இன்று காலை இணையவழியாக நடைபெற்றது.

அதில் எரிபொருள் விநியோகம் தொடர்பான சில புதிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

வாகனம் அல்லாத எரிபொருள் தேவைக்கான பதிவுகள், அடுத்த மாதத்தின் முதல் வாரத்தில் ஆரம்பமாகும் என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

சுற்றுலா பயணிக்களுக்கான எரிபொருள் அட்டையும் வழங்கப்படுவதாக அமைச்சர் தெரிவித்தார்.

அத்துடன், அத்தியாவசிய சேவைகளுக்காக விசேட பிரிவுகளின் கீழ் மேலதிக எரிபொருள் ஒதுக்கம் அறிமுகப்படுத்தப்படுவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

  • புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com
  • இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com
  • யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com
சிறப்புச் செய்திகள்