இலங்கை IMF பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை!

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று இன்று (23) இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது.

இந்தக் குழு நாளை (24) இலங்கை அரசாங்கத்துடன் தொழில்நுட்ப பேச்சுவார்த்தையை ஆரம்பிக்கவுள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான சிரேஷ்ட தூதுக்குழுவின் பிரதானி பீட்டர் ப்ரூவர் மற்றும் அதன் இலங்கையின் விவகாரத்துக்கான தலைவர் மசிரோ நோசாகி ஆகியோர் இந்த குழுவிற்கு தலைமை தாங்குகின்றனர்.

எதிர்வரும் 31ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருக்கும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு, இலங்கையின் பொருளாதார மற்றும் நிதிக் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் கலந்துரையாடவுள்ளது.

கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் தொடர்பான ஊழியர் மட்ட உடன்பாட்டை எட்டுவதும் அதன் முன்னேற்றம் குறித்து ஆராய்வதுமே இந்த விஜயத்தின் நோக்கம் என சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது.

இந்தக் குழு நாட்டில் தங்கியிருக்கும் போது, ​​அரசாங்கப் பிரதிநிதிகளுக்கு மேலதிகமாக பல தரப்பினரையும் சந்திக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அத்துடன், இந்த வருட இறுதிக்குள் சர்வதேச நாணய நிதியத்தில் இருந்து நாடு எதிர்பார்க்கும் கடன் வசதிகளை பெற்றுக்கொள்ள முடியும் என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க குறிப்பிட்டார்.

சர்வதேச நாணய நிதியத்தில் இருந்து எதிர்பார்க்கப்படும் கடன் தொகை 3 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.

  • புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com
  • இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com
  • யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com
சிறப்புச் செய்திகள்