இறக்குமதி கட்டுப்பாட்டால் சுற்றுலாத்துறை பாதிக்கும்?

மலசலகூடங்களில் பயன்படுத்தும் கடதாசி மற்றும் அதனுடன் தொடர்புடைய பொருட்களுக்குத் தேவையான மூலப்பொருட்களை இறக்குமதி செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளதால், விரைவில் பேரழிவு நிலை உருவாகலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. சுற்றுலாத் துறைக்கு மலசலகூட கடதாசி என்பது மற்றுமொரு முக்கியமான பொருளாகும். மேலும் இந்தத் துறையை வலுப்படுத்தும் முயற்சியில் அதன் மீது கட்டுப்பாடுகளை விதிப்பது சிக்கலானது என அந்தத் துறையிலுள்ள வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். சுற்றுலா ஹோட்டல்கள், மருத்துவமனைகள் மற்றும் விமானங்களுக்கு மலசலகூட கடதாசி என்பது அவசியமான பொருளாகும். எனவே அதன் […]
இலங்கைக்கான பயண அறிவுறுத்தலை நீக்கிய பிரித்தானியா,நோர்வே, பிரான்ஸ்,சுவிஸ்!

பிரித்தானிய அரசாங்கம், இலங்கைக்கான பயண ஆலோசனையை இன்று நீக்கியுள்ளது. இலங்கைக்கு மேற்கொள்ளும் அத்தியாவசிய பயணங்களைத் தவிர ஏனைய பயணங்களுக்கு எதிராக இனி அறிவுறுத்தல்களை விடுப்பதில்லை என்றும் அந்த அரசாங்கம் அறிவித்துள்ளது. இதேவேளை நோர்வே, பிரான்ஸ், சுவிட்ஸர்லாந்து ஆகிய நாடுகளும் இலங்கைக்கான பயண அறிவுறுத்தல்களை நீக்கியுள்ளன. முன்னதாக குறித்த நாடுகள், இலங்கைக்கான அத்தியாவசிய பயணங்களைத் தவிர மற்ற அனைவருக்கும் பயண ஆலோசனைகளை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com இலங்கையில் இணையம் ஊடாக […]
மீண்டும் எரிபொருளுக்கு தட்டுப்பாடு

மீண்டும் எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்கு மக்கள் முண்டியடிக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளனர். அம்பாறை மாவட்டம் கல்முனை சாய்ந்தமருது, மருதமுனை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று (25) இரவு முதல் எரிபொருளை மக்கள் பெறுவதற்கு எரிபொருள் நிலையங்களுக்கு வருகை தந்தமை குறிப்பிடத்தக்கது. கடந்த காலங்களில் QR முறைமையினால் சீராக மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் விநியோகம் திடிரென இவ்வாறு நெருக்கடிக்குள்ளானமை மக்கள் மத்தியில் சிறு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் நாடளாவிய ரீதியில் மீண்டும் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படுமோ என்ற அச்சம் மக்கள் மத்தியை ஏற்பட்டுள்ளது புலத்தையும் […]
புலம்பெயர்ந்த இலங்கையர்களின் வசதிக்காக விமான நிலையத்தில் விசேட கருமபீடம் திறக்கப்படவுள்ளது

புலம்பெயர்ந்த இலங்கையர்களின் வசதிக்காக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட கருமபீடம் ஒன்று திறக்கப்படவுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் வெளிநாடுகளுக்குச் செல்லும் புலம்பெயர்ந்த இலங்கையர்கள் தங்களுடைய பணிகளை எவ்வித இடையூறும் இன்றி உடனடியாக மேற்கொள்வதற்கு இந்த கருமபீடம் ஊடாக முடியும் என திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை, மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் கூடிய லங்கா ரெமிட் அப்ளிகேஷன் இன்று வெளிநாட்டில் பணியாற்றும் இலங்கையர்களுக்கு அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. இந்த செயலியின் […]
நல்லூர் கந்தன் ஆலய தேர்த் திருவிழா

யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் தேர்த்திருவிழா இன்று காலை இடம்பெற்றது. இன்று காலை 6.15 அளவில் இடம்பெற்ற வசந்த மண்டபப் பூஜையைத் தொடர்ந்து, சண்முகப்பெருமான் தேரில் எழுந்தருளி அடியார்களுக்கு அருள் பாலித்தார். தேர்த்திருவிழாவில் பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். அதிகாலை முதல் ஆலயத்தின் நாலா புறத்திலிருந்தும் பக்தர்கள் வருகை தந்தனர். அடியார்கள் அங்கப் பிரதட்சணம் செய்தும் அடி அழித்தும் நேர்த்திக் கடன்களை நிறைவேற்றியதுடன், நூற்றுக் கணக்கான காவடிகளும் வருகை தந்திருந்தன. நல்லூர் கந்தசுவாமி ஆலய […]
இலங்கையில் உள்ள தமது குடிமக்களை எச்சரிக்கும் இந்தியா!

இலங்கையில் இருக்கும் இந்திய குடிமக்கள் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருக்குமாறு இந்திய வெளியுறவு அமைச்சகம் வியாழக்கிழமை அறிவுறுத்தியுள்ளது. புதுடெல்லியில் இன்று செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய வெளியுறவுத்துறையின் பேச்சாளர் அரிந்தம் பாக்சி இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளார். இலங்கையில் இந்தியர்களின் பாதுகாப்பை பாதிக்கும் சம்பவங்கள் குறித்து இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம் இலங்கையில் உள்ள உள்ளூர் அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ளது. இது தொடர்பாக இந்திய குடிமக்களுக்கு வழிகாட்டுதலை வழங்கியுள்ளதாக பாக்சி தெரிவித்துள்ளார். இந்திய குடிமக்கள் இலங்கையில் இருக்கும்போது கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருக்கவேண்டும். […]
இணையத்தை கலக்கும் தோசை பிரிண்டர்!

பிளாக் அண்ட் வைட், கலர் பிரின்டர், ஃபோட்டோ பிரின்டர் எல்லாம் தெரியும்… தோசை பிரின்டர் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? தற்போது இணையத்தை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ள புதிய விஷயம் மொறுமொறுப்பான தோசைகளை அச்சடித்துக் கொடுக்கும் தோசா பிரின்ட்டர் தான்! ஆரம்ப காலங்களில் ஒரு உணவை சமைக்க வேண்டும் என்றால், அதன் செயல்முறைக்குத் தேவையான பொருட்களைத் தயார்செய்வதிலிருந்து நமக்கு நேரம் அதிகம் செலவாகும். உணவை சமைத்து, சாப்பிட்ட பிறகு, பாத்திர பண்டங்களை சுத்தம் செய்வது இன்னொரு வேலை. காலங்கள் மாற, தொழில்நுட்பங்களின் […]