ஆடை ஏற்றுமதி துறைக்கு 3 பில்லியன் டொலர் வருமானம்

வருடத்தின் முதல் ஏழு மாதங்களில் இலங்கையின் ஆடைத் துறையின் ஏற்றுமதி வருமானம் 3 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடந்துள்ளது.

கூட்டு ஆடை கைத்தொழிற்சங்க பேரவை (Joint Apparel Association Forum) வெளியிட்ட தரவுகளின்படி, இந்த ஆண்டின் ஜனவரி முதல் ஜூலை வரையான காலப்குதிக்கான ஆடை ஏற்றுமதி வருவாய் மொத்தம் 3.31 பில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.

இது 2021 ஆம் ஆண்டின் முதல் 7 மாதங்களுடன் ஒப்பிடுகையில், 3.53 சதவீதம் அதிகமாகும்.

அதற்கமைய, அமெரிக்காவிற்கான ஏற்றுமதிகள் மொத்தம் 1.41 பில்லியன் அமெரிக்க டொலர்களாக (27.12 சதவீதம் அதிகரிப்பு) பதிவாகியுள்ளது.

அதேசமயம் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிரித்தானியாவுக்கான ஏற்றுமதிகள் மொத்தம் 963 மில்லியன் அமெரிக்க டொலர்கள் (14.56 சதவீதம் அதிகரிப்பு) ஆகும்.

அத்துடன், குறித்த காலப்பகுதியில் அமெரிக்காவுக்கான ஏற்றுமதி 455 மில்லியன் டொலர்கள் (18.04 சதவீதம் அதிகரிப்பு) ஆகும்.

இலங்கையின் ஆடை மற்றும் புடவை ஏற்றுமதி வருமானம் 2021 ஆம் ஆண்டில் 23 சதவீதம் அதிகரித்து 5.4 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்தது.

ஆடை ஏற்றுமதி வருமானம் மட்டும் 26 சதவீதம் அதிகரித்து ரூ.4.95 பில்லியனாக இருந்தது.

இதற்கிடையில், 2021 ஆம் ஆண்டில் 3 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான புடவை மற்றும் ஆடை கைத்தொழல் சார் பொருட்களை இலங்கை இறக்குமதி செய்துள்ளது.

இதேவேளை, கடந்த ஜூலை மாதத்திற்கான ஆடை ஏற்றுமதியினால் 522.14 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஈட்டப்பட்டுள்ளது.

இந்த ஆண்டில் தொடர்ந்து இரண்டாவது மாதமாக தொழில்துறையின் ஏற்றுமதி வருவாய் 500 மில்லியன் அமெரிக்க டொலர்களைத் தாண்டியுள்ளது.

ஜூன் மாதத்தில், ஆடை ஏற்றுமதி 536 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வருவாயைப் பதிவு செய்துள்ளது. இது ஒரு நாட்காட்டி மாதத்தில் பதிவு செய்யப்படாத அதிகபட்ச வருமானமாகும்.

இதற்கு முந்தைய அதிகபட்ச வருவாயாக கடந்த 2019 மார்ச்சில் 504 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஈட்டப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆடை கைத்தொழில் துறையானது, 2025 ஆம் ஆண்டில் 8 பில்லியன் டொலர் ஏற்றுமதி இலக்கை நிர்ணயித்துள்ளது.

  • புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com
  • இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com
  • யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com
சிறப்புச் செய்திகள்