சஜித்துடன் இணையும் முக்கியஸ்தர்கள்!

எதிர்வரும் அரசதலைவர் தேர்தலில் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியுடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர்களான டலஸ் அழப்பெரும தயாசிறி ஜயசேகர மற்றும் ரொசான் ரணசிங்க ஆகியோர் பேச்சு நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த பொதுத் தேர்தலில் இந்த மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் சார்பில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டியவர்கள் என்பதுடன் அரசதலைவர் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலை இலக்கு வைத்து பல்வேறு தரப்பினர் தேர்தல் கூட்டணிகளை அமைத்துக் கொள்வதில் நாட்டம் […]
யாழில் வாழ் வெட்டு இளைஞன் படுகாயம் !

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை துணைவியில் வாள் வெட்டுக்கு இலக்காகி இளைஞன் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில்மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். நேற்று இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் வன்முறை கும்பல் ஒன்றே இந்த வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளனர் . இரண்டு உந்துருளிகளில் வந்த நான்கு பேர் கொண்ட வன்முறை கும்பல் இந்த வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டு விட்டுத் தப்பி சென்றுள்ளனர் . வாள் வெட்டு சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கையின் பிரதான வீதி நிலம் தாழிறங்கிய உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது

கிங்ஓயா பிரதான வீதியில் நிலம் தாழிறங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இரண்டு சுற்றுலா ஹோட்டல்களை அண்மித்துள்ள பகுதியிலேயே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நிலம் தாழிறங்கள் அபாயமட்டத்தை அடைந்துள்ளதாகவும் இதனால் பாரிய ஆபத்துக்கள் காணப்படுவதாகவும் அப்பிரதேச மக்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கல்கி கூறும் கதை என்ன?

நாக் அஷ்வின் இயக்கத்தில் பிரபாஸ் , அமிதாப் பச்சன் , கமல்ஹாசன், தீபிகா படுகோன் , திஷா பதானி உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் இணைந்து நடிக்கும் கல்கி 2898 ஏடி திரைப்படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியாகியுள்ளது. ஹோலிவுட் அளவில் ட்ரெய்லர் இருப்பதாக இரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இந்த படம் இம்மாதம் 27 ஆம் திகதி திரைக்கு வரவுள்ளது. சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கும் இந்த படத்தின் போஸ்ட் புரெடெக்ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து […]
வெப்ப அலையால் 8 பேர் உயிரிழப்பு.

ஒடிசாவில் உச்சமடைந்து வரும் வெப்ப அலையினால் கடந்த 72 மணிநேரத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா இதுவரை கண்டிராத வெப்ப அலையை தற்போது எதிர்நோக்கி வருகின்றது. குறிப்பாக வட இந்தியாவின் சில பகுதிகளில் கடந்த மே மாதத்தின் நடுப்பகுதியில் இருந்து கடுமையான வெப்பநிலை காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் வட இந்தியாவின் பல நகரங்களில் வெப்பநிலை 45-50C க்கு இடையில் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை கடந்த மே மாதம் வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின் படி கடந்த […]
நாட்டில் வைரஸ் காய்ச்சல்கள் பரவும் அபாயம் அதிகரிப்பு!

வெள்ள நீர் வடிந்து வருவதால், ஈக்களின் பெருக்கம், வயிற்றுப்போக்கு மற்றும் வைரஸ் காய்ச்சல்கள் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக, சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். “வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் காணப்படும் சாதகமான சூழ்நிலை ஈ முட்டைகள் முதிர்ச்சியடைவதை துரிதப்படுத்துவதுடன், வெள்ள நீர் குறையும்போது ஈக்கள் எண்ணிக்கையில் விரைவான அதிகரிப்புக்கு வழிவகுக்கிறது. புதிதாக குஞ்சு பொரித்த இந்த ஈக்கள், உணவு ஆதாரங்களைத் தேடி, அடிக்கடி மலம், குப்பைகள் மற்றும் அசுத்தமான பரப்புகளை நோக்கி ஈர்த்து, சுகாதார நெருக்கடியை மேலும் அதிகப்படுத்துகின்றன.” என, […]
மூன்றாவது வாரிசு : சிவகார்த்திகேயன் குஷி

நம்ம வீட்டு பிள்ளை என அன்பாக அழைக்கப்படும் சிவகார்த்திகேயன் அண்மையில் சூரியின் கருடன் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்றிருந்த போது தான் வெகு நாட்களுக்க பிறகு சிவகார்த்திகேயனை காண கிடைத்தது. பின்னர் உவினர் ஒருவரின் பிறந்தநாள் விழாவில் பங்கேற்றிருந்த சிவகார்த்திகேயன் , ஆர்த்தி ஆகியோரின் ஒரு காணொளியை பார்த்து அதில் ஆர்த்தி கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்திருந்தனர். இந்நிலையில் , நேற்றைய தினம் சிவகார்த்திகேயன் தனது சமூக வலைதளங்களில் தனக்கு மூன்றாவதாக ஆண் குழந்தை பிந்துள்ளதாக பதவிட்டிருந்தார். […]