வெப்ப அலையால் 8 பேர் உயிரிழப்பு.

ஒடிசாவில் உச்சமடைந்து வரும் வெப்ப அலையினால் கடந்த 72 மணிநேரத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா இதுவரை கண்டிராத வெப்ப அலையை தற்போது எதிர்நோக்கி வருகின்றது. குறிப்பாக வட இந்தியாவின் சில பகுதிகளில் கடந்த மே மாதத்தின் நடுப்பகுதியில் இருந்து கடுமையான வெப்பநிலை காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் வட இந்தியாவின் பல நகரங்களில் வெப்பநிலை 45-50C க்கு இடையில் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கடந்த மே மாதம் வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின் படி கடந்த மார்ச் முதல் மே வரையான காலப்பகுதியில் இந்தியா முழுவதும் வெப்பம் தொடர்பான நோய்களால் 60 பேர் உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சிறப்புச் செய்திகள்