நினைவேந்தல் தொடர்பான நிபுணர் குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு!

இலங்கையில் ஆயுத மோதல்கள், அரசியல் அமைதியின்மை அல்லது உள்நாட்டுக் கலவரம் காரணமாக உயிரிழந்தவர்களை நினைவு கூருவது குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கை அண்மையில் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டது. சிரேஷ்ட பேராசிரியர் ஜகத் வீரசிங்க, கட்புல அரங்கேற்றக் கலைகள் பல்கலைக்கழக பேராசிரியர் சந்திரகுப்த தேனுவர, யாழ் பல்கலைக்கழகப் பேராசிரியர் டி. சனாதனன், கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் பர்ஸானா ஹனீபா, தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகத்தின் பதில் பணிப்பாளர் நாயகம் துஷாரி […]

நூடுல்ஸ் உண்ண தடை.

தென் கொரியாவை சேர்ந்த பிரபல நூடுல்ஸ் தயாரிப்பு நிறுவனம் ஒன்று உலகின் அதிக கார சுவை கொண்ட நூடுல்சை தயாரித்து விற்பனை செய்கின்றது. உலகம் முழுவதும் இந்த நூடுல்ஸ் ஏற்றுமதி செய்யப்படுகிறது. காரம் மற்றும் சுவை காரணமாக இந்த நூடுல்சுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். இந்தநிலையில் ஐரோப்பிய நாடான டென்மார்க்கில் அதிக கார சுவை கொண்ட இந்த நூடுல்சுக்கு தடை விதித்துள்ளது. டென்மார்க்கின் உணவு கட்டுப்பாடு அமைப்பு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி அந்த நூடுல்சில் அளவுக்கதிகமான காப்சைசின் […]

வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவிப்பு!

நாளை (வெள்ளிக்கிழமை) நாட்டில் மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மேலும் ஊவா மாகாணம், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் மாலை அல்லது இரவில் ஒரு சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. அத்துடன் மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் திருகோணமலை, அம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் […]

3000 சிறுவர்களின் உயிரைக் காப்பாற்றிய பாடகி!

இந்தியாவைச் சேர்ந்த பாடகரும், பாடலாசிரியருமான பாலக் முச்சல், ‘சேவிங் லிட்டில் ஹார்ட்ஸ்’ என்ற நிதி திரட்டும் அமைப்பின் மூலம் 3000 சிறுவர்களின் உயிரைக் காப்பாற்றியுள்ள சம்பவம் இணைய வாசிகள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 32 வயதான பாலக் முச்சல் இதய நோய்களினால் பாதிக்கப்படும் ஏழை சிறுவர்களுக்கு நிதியுதவி வழங்கும் பொருட்டு அவரது சகோதரர் பாலாஷ் முச்சாலுடன் இணைந்து இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் மேடை நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். இதன் மூலம் கிடைக்கப்பெறும் பணத்தைக் கொண்டு சுமார் 3,000 சிறுவர்களின் […]

சஜித்துடன் இணையும் முக்கியஸ்தர்கள்!

எதிர்வரும் அரசதலைவர் தேர்தலில் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியுடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர்களான டலஸ் அழப்பெரும தயாசிறி ஜயசேகர மற்றும் ரொசான் ரணசிங்க ஆகியோர் பேச்சு நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த பொதுத் தேர்தலில் இந்த மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் சார்பில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டியவர்கள் என்பதுடன் அரசதலைவர் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலை இலக்கு வைத்து பல்வேறு தரப்பினர் தேர்தல் கூட்டணிகளை அமைத்துக் கொள்வதில் நாட்டம் […]

யாழில் வாழ் வெட்டு இளைஞன் படுகாயம் !

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை துணைவியில் வாள் வெட்டுக்கு இலக்காகி இளைஞன் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில்மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். நேற்று இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் வன்முறை கும்பல் ஒன்றே இந்த வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளனர் . இரண்டு உந்துருளிகளில் வந்த நான்கு பேர் கொண்ட வன்முறை கும்பல் இந்த வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டு விட்டுத் தப்பி சென்றுள்ளனர் . வாள் வெட்டு சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.