கல்கி கூறும் கதை என்ன?

நாக் அஷ்வின் இயக்கத்தில் பிரபாஸ் , அமிதாப் பச்சன் , கமல்ஹாசன், தீபிகா படுகோன் , திஷா பதானி உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் இணைந்து நடிக்கும் கல்கி 2898 ஏடி திரைப்படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியாகியுள்ளது.

ஹோலிவுட் அளவில் ட்ரெய்லர் இருப்பதாக இரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இந்த படம் இம்மாதம் 27 ஆம் திகதி திரைக்கு வரவுள்ளது.

சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கும் இந்த படத்தின் போஸ்ட் புரெடெக்ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருவதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

அறிவியல் மற்றும் எதிர்காலத்தில் நடக்கும் சம்பவங்களை புராணத்தை அடிப்படையாகக் கொண்டு கல்கி திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என 5 மொழிகளில் கல்கி படத்தில் ட்ரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

சிறப்புச் செய்திகள்