இஸ்ரேல் மீது ஈரான்(Iran) புதிதாக ஏவுகணைகள் வீசியுள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் (IDF) தெரிவித்துள்ளன.
இதனால் ஈரானில் இருந்து ஏவுகணை ஏவப்பட்டதால் இஸ்ரேல்(Israel) முழுவதும் எச்சரிக்கை அலாரங்கள் ஒலிக்கின்றன என இஸ்ரேல் பாதுகாப்புப் படை எக்ஸ் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளது.
ஈரானில் இருந்து இஸ்ரேலுக்குள் ஏவுகணைகள் ஏவப்பட்டதை அடுத்ததாக, இஸ்ரேல் நாடு முழுவதும் எச்சரிக்கை அலாரம் ஒலிக்கத் தொடங்கியுள்ளன என குறிப்பிடப்பட்டுள்ளது.
“சற்று முன்னர், இஸ்ரேலை நோக்கி ஈரானில் இருந்து ஏவுகணைகள் ஏவப்பட்டதை IDF கண்டறிந்ததுள்ளது.
இந்த அச்சுறுத்தலை எதிர்க்க பாதுகாப்பு முறைமைகள் செயல்படுத்தப்படுகின்றன.
இஸ்ரேல் விமானப்படை (IAF) தற்போது அவசர நடவடிக்கைகளில் ஈடுபட்டு, அச்சுறுத்தலை அகற்றுவதற்கான தடுப்பு மற்றும் தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
எச்சரிக்கை அலாரம் ஒலிக்கும்போது, மக்கள் பாதுகாப்பான இடத்துக்குள் செல்லவும், அடுத்த அறிவிப்பு வரும் வரை அங்கேயே இருக்கவும் அறிவுறுத்தப்படுகின்றனர்.
இந்த தாக்குதல் குறித்து, ஈரான் வெளிவிவகார அமைச்சர் சையத் அப்பாஸ் அரக்ச்சி கூறுகையில், “ஈரானின் இராணுவ நடவடிக்கைகள் தெஹரான் நேரப்படி காலை 4:00 மணி வரை தொடர்ந்தது” எனத் தெரிவித்துள்ளார்.