எரிவாயு கப்பலொன்று இன்று நாட்டை வந்தடைந்தது!

எரிவாயு தாங்கிய கப்பல் ஒன்று இன்று (19) நாட்டை வந்தடைந்துள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதன்படி, குறித்த கப்பலில் சுமார் 3,800 மெட்ரிக் டன் எரிவாயு கொண்டுவரப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், எரிவாயு மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு அதிகரித்துள்ளதால், நாட்டின் பல பகுதிகளில் 24 மணிநேரமும் மக்கள் வரிசைகளில் நிற்பதனை அவதானிக்க கூடியதாக உள்ளது.

இதேவேளை, இந்த வார இறுதியில் எரிபொருள் தட்டுப்பாடு தீர்க்கப்படும் என வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் கருத்துரைத்த அவர், தற்போது எரிபொருள் நிலையங்களுக்கு அனைத்து வகையான டீசல் தொகையினை நேற்று இரவுக்குள் விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுவதாக குறிப்பிட்டார்.

கடந்த மார்ச் மாதம் 28 ஆம் திகதியிலிருந்து பெற்றோல் தாங்கிய கப்பல் ஒன்று நங்கூரமிடப்பட்டுள்ளது.

நாட்டில் நிலவும் நிதி நெருக்கடி காரணமாக அந்த கப்பலுக்கான கட்டணத்தை செலுத்த முடியாதுள்ளது. இன்றைய தினம் வரையில் அதற்கான கட்டணத்தை செலுத்துவதற்கு இயலாது உள்ளது.

எனவே பெற்றோலை பெற்றுக் கொள்வற்காக இன்றும், நாளையும் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் வரிசையில் காத்திருக்க வேண்டாம் நோயாளர் காவு வண்டி உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரமே இன்று பெற்றோல் விநியோகிக்கப்படும்.

சகல எரிபொருள் நிலையங்களுக்கும் பெற்றோல் விநியோகிக்கப்பட்டதன் பின்னர் எதிர்வரும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பெற்றோலை மக்களுக்கு விநியோகிக்கப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர குறிப்பிட்டுள்ளார்.


⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!

🏠 “தாரணி சூப்பர்மார்கெட்” வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com


🛒 இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com

சிறப்புச் செய்திகள்