லிட்ரோ வீட்டு சமையல் எரிவாயு கொள்கலன் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ கேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இன்று (26) நள்ளிரவு முதல் இந்த விலை அதிகரிப்பு அமுலாகவுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதன்படி, லிட்ரோ 12.5 கிலோகிராம் எரிவாயு கொள்கலனின் புதிய விலை 4,860 ரூபாவாகவும், 5 கிலோ எரிவாயு கொள்கலனின் விலை 1,945 ரூபாவாகவும், 2.3 கிலோ எரிவாயு கொள்கலனின் விலை 910 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக லிட்ரோ 12.5 கிலோகிராம் எரிவாயுவின் புதிய விலை 2,675 ரூபாவாகவும், 5 கிலோ லிட்ரோ எரிவாயுவின் விலை 1,071 ரூபாவாகவும், 2.3 கிலோ எரிவாயு கொள்கலனின் விலை 506 ரூபாவாகவும் காணப்பட்டது.
கடந்த 22 ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் 12.5 கிலோ எரிவாயு கொள்கலன் விலையை 5, 175 ரூபாவாக அதிகரிக்க லிட்ரோ நிறுவனம் தீர்மானித்திருந்தது.
எனினும், பின்னர் அதற்கு அனுமதி வழங்கமுடியாது எனத்தெரிவித்து குறித்த விலை அதிகரிப்பை நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை நிராகரித்திருந்தது.
இதேவேளை, சமையல் எரிவாயு விலைகளை அதிகரிக்காமல், உரிய வகையில் எரிவாயுவை விநியோகிக்க முடியாது என லிட்ரோ நிறுவனத் தலைவர் விஜித ஹேரத் கொழும்பில் இன்று பிற்பகல் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.
சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு தொடர்பில் அரசாங்கம் முடிவெடுக்க வேண்டும். விலை அதிகரிக்காமைக் காரணமாக தமது நிறுவனம் நட்டத்தில் இயங்குகிறது.
இதற்காக உலக சந்தையில் விலை அதிகரிப்புக்கமைய, சமையல் எரிவாயு விலை சூத்திரத்தை அறிமுகப்படுத்துமாறு லிட்ரோ நிறுவனத் தலைவர் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com
⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!
🏠 “தாரணி சூப்பர்மார்கெட்” வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com
🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com