பேக்கரி பொருட்களுக்கு தேவையான கோதுமை மா, பட்டர், மாஜரின் மற்றும் பாம் எண்ணெய் போன்றவற்றின் தட்டுப்பாடு காரணமாக தாங்கள் பாரிய சுமைக்கு உள்ளாகியுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
தற்போது பொதுமக்களும், பேக்கரி உள்ளிட்ட அனைத்து தொழில் துறையினரும் கடும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளதாக சங்கத்தின் தலைவரான என்.கே.ஜெயவர்தன தெரிவித்துள் ளார்.
குறைந்தது இன்னும் ஒரு மாதத்துக்கு பேக்கரி தொழிலை முன்னெடுக்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.
சில மாதங்களாக மாவுத் தட்டுப்பாட்டால் தொழில்துறை சுமையாக இருந்ததாகவும், தற்போது ஏனைய மூலப்பொருட்களின் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பட்டர் , மாஜரின், பாம் எண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் இறக்குமதி செய்யப்ப டுவதாகவும், நாட்டின் தேவையில் ஐந்து சதவீதத்துக்கும் குறைவாக உள்ளூரில் உற்பத்தி செய்யப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
டொலர் தட்டுப்பாடு காரணமாக தற்போது மூலப்பொருட்களை இறக்குமதி செய்ய முடியாது.
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மின்பிறப் பாக்கிகளைப் பயன்படுத்த முடியாத நிலையில், மின்வெட்டு காரணமாக பேக்கரிகளின் செயற்பாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
இதனால் அனைத்து தொழில்களும் கடும் சுமைக்கு உள்ளாகியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு 24 மணி நேரத்துக்குள் பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com
⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!
🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com
📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்
🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com