இவ்வாண்டு ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில் மே மாதத்தில் புலம்பெயர்ந்த இலங்கைத் தொழிலாளர்கள் இலங்கைக்கு அனுப்பிய தொகை கணிசமாக அதிகரித்துள்ளது.
எனினும், மே 2021 உடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு மே மாதத்தில் இலங்கைக்கு அனுப்பப்பட்ட பணத்தொகை இன்னும் குறைந்த அளவிலேயே உள்ளது.
ஏப்ரல் மாதத்தில் 248.9 மில்லியன் அமெரிக்க டொலரை அனுப்பியுள்ள வெளிநாட்டு இலங்கைத் தொழிலாளர்கள் மே மாதத்தில் 304.1 மில்லியன் அமெரிக்க டொலர்களை அனுப்பியுள்ளனர்.
மே 2021 இல், பணம் அனுப்பிய தொகை 460.1 மில்லியன் அமெரிக்க டொலராக இருந்தது.
Post Views: 122