இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு, ‘வருகையின் பின்னரான விசா’ (On arrival visa) அனுமதியைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

கொரோனா தொற்றுப் பரவல் குறைவடைந்து வருகின்ற நிலையில், இலங்கையின் சுற்றுலாத் துறையை மீளக் கட்டியெழுப்பும் நோக்கில், இந்த நடவடிக்கையை மேற்கொள்ள தீரமானிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் மிகப்பெரிய சுற்றுலா சந்தையாக இந்தியா உள்ளது. கடந்த ஆண்டு இலங்கைக்கு சுற்றுலா மேற்கொண்டவர்களுள், 42 சதவீதமானோர் இந்திய சுற்றுலாப் பயணிகளாவர்.

இந்த நிலையில், இந்திய சுற்றுலாப் பயணிகள், இலங்கைக்க வந்ததன் பின்னர், தங்களது விசா அனுமதியைப் பெற்றுக்கொள்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளது.

இதற்கு முன்னர், ஐரோப்பிய நாடுகளுக்கு இந்த ‘வருகையின் பின்னரான விசா’ அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், இந்தியாவும் இந்தப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளதாக, இலங்கை சுற்றுலா மேம்பாட்டு நிறுவனத்தின் தலைவர் கிமாலி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்

🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு 24 மணி நேரத்துக்குள் பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com

யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!

🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com

📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்

🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com