அமெரிக்கா, ஜப்பான், இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகளின் அதிகாரிகளுடன் நிதியுதவி பெறுவது தொடர்பில் உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தைகளை நடத்த திட்டமிட்டுள்ளதாக நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான கடன்களை மறுசீரமைப்பதற்கு தேவையான ஆலோசகர்களை நியமிக்க சுமார் மூன்று வாரங்கள் தேவைப்படும் என்றும் அவர் கூறினார்.
வாஷிங்டனில் ப்ளூம்பெர்க் தொலைக்காட்சிக்கு ,நிதி அமைச்சர் அலி சப்ரி அளித்த அளித்த பேட்டியில் , நிதி மற்றும் சட்ட ஆலோசகர்களை தேர்வு செய்ய 15 முதல் 20 நாட்கள் தேவைப்படுவதாக குறிப்பிட்டார்.
அடுத்த ஆறு மாத காலப்பகுதியில் ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் உலக வங்கியிடம் இருந்து அவசர கடனாக சுமார் 500 மில்லியன் டொலர்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சர் கூறினார்.
அமைச்சர் , சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி கடன்களை ஒழுங்கான முறையில் மறுசீரமைத்து நாட்டின் ஸ்திரத்தன்மையை முன்னெடுப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும், கடன்களை மறுசீரமைப்பு செய்வது நீண்ட கால தீர்வாக அமையாது எனவும் தெரிவித்துள்ளார்,
அமைச்சர் , வொஷிங்டனில் ,உலக நாணய நிதியம் (IMF) மற்றும் உலக வங்கியின் அவசர நிதி உதவியை பெறுவதற்காக பல அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com
⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!
🏠 “தாரணி சூப்பர்மார்கெட்” வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com
🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com