ஒரு போத்தல் தேங்காய் எண்ணெயின் விலை ரூபா 500 ஆக உயர்வு

அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கமானது தேங்காய் எண்ணெய் , பாம் எண்ணெய் மற்றும் மரக்கறி எண்ணெய் ஆகியவற்றுக்கு இடையேயான வேறுபாடுகள் தொடர்பான வழிகாட்டல்களை ஏன் வெளியிடவில்லை என கேள்வி எழுப்பியுள்ளது.

அரசாங்கத்தின் பொறுப்பற்ற நடவடிக்கையால் ஒரு போத்தல் தேங்காய் எண்ணெயின் விலையானது 500 ரூபாவாக அதிகரித்துள்ளதாக அச்சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார் .

இதேவேளை அரசாங்கமானது பாம் எண்ணெய் இறக்குமதிக்கு தடைவிதித்துள்ளமையால் , பேக்கரி உரிமையாளர்களுக்கு தேங்காய் எண்ணெய் மற்றும் பாம் எண்ணெய் என்பவற்றுக்கு இடையேயான வேறுபாடுகளை கண்டறிய முடியாமல் உள்ளது.

நுகர்வோரிடமிருந்து அதிக பணத்தைப் பெற்றுக் கொள்வதற்காக ஊழல் மிக்க வர்த்தகர்கள் தேங்காய் எண்ணெயையும் பாம் எண்ணெயையும் ஒன்றாகக் கலக்கின்றனர் .

தூய பாம் எண்ணெய் மற்றும் பிற வகை எண்ணெய் வகைகளை அடையாளம் காண்பதற்கான ஒழுங்குமுறை அரசாங்கத்திடம் இல்லை.

எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் எண்ணெய்க்கான கேள்வியானது அதிகரிக்கும் . தேங்காய் எண்ணெயின் விலையானது அதிகரித்ததைத் தொடர்ந்து உற்பத்தியில் பற்றாக்குறை நிலவுகின்றது.

இதனால் இதற்கான கேள்வி அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார் .

யாழ் நகரில் பிரம்மாண்டமான முறையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது தாரணி சுப்பர் மார்க்கெட் – யாழ் தட்டாதெருச் சந்தியின் அருகில் 
TharanySuperMarket.com


LankaFace.com


Hi2World.com


O2Oexam.com

TharanySuperMarket.com

Address  : No. 758 Kankesanturai Road, Jaffna 40000, Sri Lanka
Contact  : +94 212 223 433
Location : https://maps.app.goo.gl/8vpiuxH712fq9EN86