விவசாயத்துறையில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண தாமதிப்பது நாட்டின் பொருளாதாரம் மற்றும் உணவு பாதுகாப்பில் நேரடி தாக்கத்தை செலுத்தும் என இலங்கை விவசாய தொழில்முனைவோர் சங்கம் தெரிவித்துள்ளது.
நாட்டின் விவசாயத்தை ஊக்குவிப்பதற்கு அரசாங்கம் குறுகிய கால மற்றும் நீண்ட கால திட்டங்களை நடைமுறைப்படுத்துவதன் அவசியம் தொடர்பிலும் அந்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
குறுகிய கால திட்டங்கள் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள யோசனைகளாவன…
அவசியமான உரம் மற்றும் கிருமிநாசினியை வழங்குதல்
விவசாயிகளுக்கான தேசிய திட்டத்தை செயற்படுத்துதல்
துறைசார் நிபுணர்களிடம் ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளல்
நீண்ட கால திட்டங்களாக இலங்கை விவசாய தொழில்முனைவோர் சங்கம் முன்வைத்துள்ளவை…
விவசாய உற்பத்தி தொடர்பிலான களஞ்சிய வசதியை மேம்படுத்துதல்
விவசாயிகளிடையே தொழில்வாண்மையை மேம்படுத்துதல்
நவீன தொழில்நுட்பங்களை செயற்படுத்துதல்
பெறுமதி சேர்க்கப்பட்ட விவசாய உற்பத்திகளை மேம்படுத்துதல்
இரசாயன உரத்திற்கு விதிக்கப்பட்ட தடை காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்பு நீண்ட காலத்திற்கு தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com
⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!
🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com
📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்
🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com





