புதிய வசதி: செல்போன் எண் சொல்லாமலே வாட்ஸ்அப்பில் உரையாடலாம்!

வாட்ஸ்அப் பயனர்கள் தங்களது செல்போன் எண்ணை மற்றவர்களுக்கு தெரியப்படுத்தாமலேயே அவர்களுடன் உரையாடும் (Chat) வசதியை அந்நிறுவனம் அறிமுகப்படுத்துகிறது.

அடுத்த சில மாதங்களில் இந்தத் தளத்தின் முந்நூறு கோடி கணக்கு வைத்திருப்பவர்களுக்கும் உலகளாவிய ரீதியில் இது பயன்பாட்டிற்குத் தரப்படும் என்று அந்தத் தளம் தெரிவித்துள்ளது.

திங்கட்கிழமை முதல் பயனர்கள் செயலி மூலம் ஒரு பெயரை முன்கூட்டியே பதிவு செய்யத் தொடங்க முடியும், இருப்பினும் இது கட்டாயமில்லை.

பயனர்கள் தங்களது பயனர் பெயர்களை எப்போது வேண்டுமானாலும் நீக்கவோ அல்லது மாற்றவோ முடியும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது முழுமையாகச் செயல்படுத்தப்பட்டதும், வாட்ஸ்அப் பயனர்கள் தங்களது பயனர் பெயரை (username) மட்டுமே பரிமாறிக்கொண்டு ஒருவரோடு ஒருவர் தொடர்புகொள்ள முடியும். தேவையற்ற செய்திகளைத் தடுப்பதற்கும் (block) அல்லது அதுகுறித்துப் புகாரளிப்பதற்கும் (report) இன்னும் விருப்பத்தேர்வுகள் இருக்கும்.

பெயர்கள் 35 எழுத்துகளுக்குள் இருக்கவேண்டும், சில உயர் பதவிகளில் உள்ள அதிகாரிகள் மற்றும் பிரபலங்களின் பெயர்கள் வேறு யாருக்கும் கிடைக்காது என்பதை தவிர சில கட்டுப்பாடுகள் மட்டுமே இருக்கும்.

உதாரணமாக, வாட்ஸ்அப்பில் டொனால்ட் டிரம்ப் என்று தங்களை அழைத்துக் கொள்ளும் பயனர்கள் அதிகமாக இருக்க வாய்ப்பில்லை.

மெட்டா குழுமத்தைச் சொந்தமான இந்த நிறுவனம், பயனர் பெயர்களை ஒரு தனியுரிமை அம்சமாக விவரித்துள்ளது. bbc

உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp
குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

சிறப்புச் செய்திகள்