விரும்பிய விலைகளில் பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தகர்கல்

வர்த்தகர்கள் தாங்கள் விரும்பிய விலைகளில் பொருட்களை விற்பனை செய்து வருவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்ட பொருட்களுக்கான கட்டுப்பாட்டு விலை நீக்கப்பட்டுள்ள நிலையில், வர்த்தகர்கள் தாங்கள் நினைத்த விலைகளில் பொருட்களை விற்பனை செய்கின்றனர் எனவும் நுகர்வோர் பெரும் பாதிப்புக்களை எதிர்நோக்கி வருவதாகவும் தெற்கு ஊடகமொன்று குற்றம் சுமத்தியுள்ளது.

சந்தையில் பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சம் காரணமாக அமைச்சரவையினால் கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக கட்டுப்பாட்டு விலை நீக்கப்பட்டது.

ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி, காப்புறுதி கட்டணங்கள், தாமதக் கட்டணங்கள் உள்ளிட்ட காரணிகளினால் இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலைகள் பாரியளவில் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சில வர்த்தகர்கள் தாங்கள் நினைத்த நினைத்த விலைகளுக்குப் பொருட்களை விற்பனை செய்வதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு கூடுதல் விலைக்குப் பொருட்களை விற்பனை செய்வோருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது நடைமுறைச் சாத்தியமில்லை என நுகர்வோர் விவகார அதிகார சபையின் உயர் அதிகாரியொருவர் தெற்கு ஊடகமொன்றிற்குத் தெரிவித்துள்ளார்.

🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com

யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!

🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com

📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்

🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com

உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp
குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

சிறப்புச் செய்திகள்