தனியார் பேருந்து சேவைகள் இடைநிறுத்தம்!

நாட்டின் பல்வேறு இடங்களில் எரிபொருள் விலையேற்றம் காரணமாக தனியார் பேருந்து சேவைகள் ஸ்தம்பிதம் அடைந்துள்ளன.

இதனால் பல பிரதேசங்களில் தனியார ் பேருந்து சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், பல பேருந்துகள் சேவையில் இருந்து விலகியுள்ளதாக பேருந்து தொழிற்சங்கம் அறிவித்துள்ளது.

இதேவேளை, எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பேருந்து உள்ளிட்ட போக்குவரத்து சேவைகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில் எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் வருடாந்த பேருந்து கட்டண திருத்தம் என்பன அடிப்படையில் குறைந்த பேருந்து கட்டணம் 40 ரூபாவரை அதிகரிக்கக்கூடும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன நேற்று ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

எதிர்வரும் 2 மாதங்களில் வருடாந்த பேருந்து கட்டண திருத்தம் இடம்பெறும்.

இதன்போது டீசலின் விலை கவனத்தில் கொள்ளப்பட்டு பேருந்து கட்டணம் திருத்தப்படும்.

தற்போதைய நிலை நீடிக்குமாயின் குறைந்த பேருந்து கட்டணம் 40 ரூபா வரை அதிகரிக்கப்படும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.

அத்துடன், சில பகுதிகளில் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மற்றும் எரிவாயு விற்பனை நிலையங்கள் என்பன மூடப்பட்டுள்ளன.

திறக்கப்பட்டுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மற்றும் எரிவாயு விற்பனை நிலையங்களில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதாக எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com

யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!

🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com

📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்

🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com

உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp
குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

சிறப்புச் செய்திகள்