சர்வதேச நாணயநிதியத்துடன் 18 ம் திகதி பேச்சுவார்த்தைகள்

சர்வதேச நாணயநிதியத்துடன் 18 ம் திகதி பேச்சுவார்த்தைகள் ஆரம்பம்- நிதியமைச்சர்

சர்வதேச நாணயநிதியத்துடன் ஏப்பிரல் 18 ம் திகதி பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கவுள்ளதாக நிதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

இலங்கை பொருளாதாரத்திற்கு அவசியமாகவுள்ள 4 பில்லியன் டொலர் நிதி உதவியை பெற்றுக்கொள்வது தொடர்பிலேயே பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

4 பில்லியன் டொலர் உதவியை பெற சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை பேச்சுவார்த்தை

இலங்கையின் பொருளாதாரத்திற்கு 4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் உதவியை பெற்றுக்கொள்வதற்கு சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தையை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுளளதாக நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியொன்றின்போது, நிதி அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அதன்படி, எதிர்வரும் 18ஆம் திகதி இந்த பேச்சுவார்த்தையை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

வொஷிங்டனில் இடம்பெறவுள்ள இந்தப் பேச்சுவார்த்தைக்கான இலங்கையின் உயர்மட்டக் குழுவில், மத்திய வங்கி ஆளுநர், திறைசேரி செயலாளர் ஆகியோருடன், தொழில்நுட்ப நிபுணர் குழுவும் பங்கேற்க உள்ளதாக நிதி அமைச்சர் முன்னதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com

யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!

🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com

📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்

🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com

உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp
குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

சிறப்புச் செய்திகள்