உண்டியல் வர்த்தகத்தின் பின்னணியில் ராஜபக்சர்கள்

உண்டியல் வர்த்தகத்தின் பின்னணியில் ராஜபக்ச குடும்பம் உள்ளது என முன்னிலை சோசலிசக் கட்சியின் பிரசார செயலாளர் துமிந்த நாகமுவ ( Duminda Nagamuwa) அறிவித்துள்ளார்.

சிங்கள வலை ஒளித் தளம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் இதனை அவர் தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்…

“ பசில் ராஜபக்ச பேட்டி ஒன்றில் தான் சட்டவிரோத நிதிச் சந்தையில் இருந்து டொலர்களை பெற்றதாக கூறினார். உலகில் எந்த அரசாங்கமும் சட்டவிரோத நிதி சந்தையில் பணத்தை பெறாது என்பதுடன் அதனை ஊக்குவிக்காது.

உண்டியல் முறையை பிரதிநிதித்துவம் செய்யும் வகையிலேயே அவர் பேசினார். மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் உண்டியல் பணப் பரிமாற்றும் வர்த்தம் தொடர்பாக தளர்வான கொள்கையையே கடைப்பிடித்தார்.

ஒன்றரை பில்லியன் டொலர்களே உண்டியல் பணப் பரிமாற்று வர்த்தகத்தில் புழங்குவதாக அஜித் நிவாட் கப்ரால் கூறினார். அது உண்மையல்ல, இதற்கு முன்னரும் வெளிநாடுகளில் தொழில் புரிவோரில் சுமார் 40 வீதமானோர் சட்டவிரோதமான பணப் பரிமாற்று முறை ஊடாகவே பணத்தை அனுப்பினர்.

அத்தோடு நெருக்கடி இல்லாத காலத்திலும் உண்டியல் முறை ஊடாக நாட்டுக்கு பணம் வந்தது என்பது உத்தியோகபூர்வ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இந்த வர்த்தகத்துடன் ராஜபக்ச குடும்பமும், அவர்களின் நெருங்கிய நண்பர்களின் வலையமப்பும் சம்பந்தப்பட்டுள்ளது” என்றார்

🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com

யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!

🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com

📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்

🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com

உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp
குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

சிறப்புச் செய்திகள்