வெட் வரி அதிகரிப்பு இன்று முதல் அமுல்!

வெட் வரி என்ற பெறுமதி சேர் வரி அதிகரிப்பு இன்று முதல் நடைமுறைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி பெறுமதி சேர் வரி 12 வீதத்திலிருந்து 15 வீதமாக உயர்த்தப்பட உள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றில் இடைக்கால வரவு செலவுத்திட்டமொன்றை சமர்ப்பித்திருந்தார்.

இதன்போது அவர், வெட் வரியை அதிகரிப்பது குறித்த யோசனையை முன்மொழிந்திருந்தார்.

வரவு செலவுத் திட்டம் மீதான வாக்கெடுப்பை தொடர்ந்தே வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்துவது வழமையானது.

எனினும்இ பெறுமதி சேர் வரி அதிகரிப்பு இன்று முதல் நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

  • புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com
  • இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com
  • யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com
சிறப்புச் செய்திகள்