இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி நேற்றைய தினத்துடன் ஒப்பிடும்போது இன்று (19) மேலும் உயர்ந்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகப்பூர் நாணய மாற்று விபரங்களுக்கு அமைவாக,

அமெரிக்க டொலர் ஒன்றுக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று 296.42 ரூபாவாகவும், 304.77 ரூபாவாகவும் உள்ளது.

நேற்று புதன்கிழமை (18) அமெரிக்க டொலர் ஒன்றுக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியானது 296.82 ரூபாவாகவும், 305.19 ரூபாவாகவும் காணப்பட்டிருந்தது.

வளைகுடா நாணயங்கள் உட்பட ஏனைய பல வெளிநாட்டு நாணயங்களுக்கு நிகராகவும் ரூபாவின் பெறுமதி இன்று உயர்ந்துள்ளது.

உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp
குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

சிறப்புச் செய்திகள்