கனடா மக்களுக்கு ஏற்பட்டுள்ள புதிய சிக்கல்!

டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தை கண்டித்து அமெரிக்காவைப் புறக்கணிக்கும் கனேடியர்கள் தங்கள் விடுமுறைக்காக அதிக பணம் செலவிடுகிறார்கள் என ஆய்வறிக்கை ஒன்றில் தெரிய வந்துள்ளது.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் கனேடிய மக்கள் மற்ற நாடுகளுக்கு பயணம் செய்வதால் அதிக பணம் செலவிடும் சூழல் உருவாகியுள்ளது.

ஆர்ஜென்டினாவுகு கனேடியர்களின் பயணம் 148 சதவீதமும், ஜப்பானுக்கு 137 சதவீதமும், டென்மார்க்கிற்கு 114 சதவீதமும், குராசோவிற்கு 101 சதவீதமும் உயர்ந்துள்ளது.

போர்த்துக்கலுக்கு 61 சதவீதமும், ஸ்பெயினுக்கு 35 சதவீதமும் அதிகரித்துள்ளது.

கனடாவின் பொருளாதாரத்தின் மீதான ஜனாதிபதி ட்ரம்பின் தாக்குதல்களும், 51வது மாகாணமாக மாற்றுவதற்கான அச்சுறுத்தல்களும் கனேடிய மக்களை கோபப்படுத்தியுள்ளன.

இதனால் அதிக எண்ணிக்கையில் அமெரிக்காவிற்கான பயணங்களை கனேடிய மக்கள் தவிர்த்து வருகின்றனர்.

இந்நிலையில், அமெரிக்காவிற்கான விமானங்களைக் குறைத்தும், மெக்சிகன் மாற்றுப் பயணங்களுக்கு அடிக்கடி செல்வதை அதிகரிப்பதன் மூலமும் விமான நிறுவனங்கள் தங்கள் பாதையை மாற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.

இந்த ஆண்டின் முதல் காலாண்டில் கனடாவிலிருந்து அமெரிக்காவிற்கு செல்லும் விமானங்கள் 7 சதவீதம் சரிவைக் கண்டுள்ளதாக ஏர் கனடா தெரிவித்துள்ளது.

உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp
குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

சிறப்புச் செய்திகள்