மட்டக்களப்பு மண்முனை தென்எருவில்பற்று களுவாஞ்சிக்குடி பிரதேசசபை கன்னி அமர்வில் எடுக்கப்பட்ட தீர்மானம் தான் இன்று எல்லோராலும் பேசப்பட்டு வருகின்றது.
மண்முனை தென்எருவில்பற்று பிரதேசசபையில், திருவிழாகாலங்களின் போது கடைகளுக்கு வரும் வாடகைகளில் 30 வீத வருமானத்தையும், வாகன பாதுகாப்பு நிலையங்களில் வரும் வாடகை பணத்தில் 50 வீத வருமானத்தையும் பெற்றுக்கொள்ளுதல் என்ற பிரேரணை கொண்டுவரப்பட்டது.
அது 11 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதற்கு பிரதேசசபை தரப்பிலிருந்து அனைத்து ஆலயங்களிடமும் கலந்துரையாடப்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது.
கடும் பிரேயத்தனத்தின் மத்தியிலே களுதாவளை பிரதேசசபையின் ஆட்சி அமையப்பெற்றுள்ளது.
இந்த களுதாவளை பிரதேசத்தில் இருக்ககூடிய வெறுப்பு மற்றும் விருப்பமின்மை காரணமாகதான் இவ்வாறான தீர்மானங்களுக்கு காரணம் என்று அந்த ஊர் மக்கள் பேசுகின்றனர்.
Post Views: 174