சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சுந்தரி தொடரின் மூலம் மக்களிடையே பிரசித்தி பெற்றவர் நடிகை ஸ்ரீ கோபிகா.
அன்பே வா தொடரிலும் நடிகை டெல்டா விலகியதன் பின்னர், அதில் கதாநாயகியாக நடித்தார்.
மேலும் அவர் பிரபுதேவாவுடன் உல்ஃப் என்ற திரைப்படத்திலும் நடித்து முடித்துள்ள நிலையில், அதன் முன்னோட்டக் காட்சிகள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில் இவர் கடந்த சில ஆண்டுகளாக வியாசக் ரவி என்பவரை காதலித்து வந்துள்ளார். தற்சமயம் அவரை கரம்பிடிக்கவுள்ளார்.
தற்போது அவரது நிச்சயதார்த்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார் ஸ்ரீ கோபிகா.
மேலும் 2016ஆம் ஆண்டு முதல் தனது சிறந்த நண்பராக இருப்பவரை காதலராக அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
திரைத்துறையைச் சேர்ந்த பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Post Views: 130