IMFஇன் ஆதரவுடன் கூடிய வேலைத்திட்டம்

சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவுடன் கூடிய வேலைத்திட்டம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என இலங்கைக்கான தூதுக்குழுவின் பிரதானி மசஹிரோ நொசகி தெரிவித்துள்ளார்.

இலங்கையின் கடுமையான கொடுப்பனவுச் சிக்கல்களைத் தீர்ப்பதற்கும் பொருளாதாரத்தை விரைவில் நிலையான வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதற்கும் இந்த வேலைத்திட்டம் அவசியமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் அறிக்கை ஒன்றை விடுத்துள்ள அவர், எந்தவொரு ஒப்பந்தத்திற்கும் நாட்டின் கடன்களை நிலையான பாதையில் கொண்டு செல்ல முடியும் என்பதற்கு போதுமான உத்தரவாதங்கள் வழங்கப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் தற்போதைய பொருளாதார நெருக்கடி மற்றும் வரிய மக்கள் உட்பட பாதிக்கப்பட்டுள்ளவர்கள் எதிர்நோக்கும் கஷ்டங்கள் தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் மிகவும் அக்கறை கொண்டுள்ளது.

எனினும் இலங்கையின் பொது கடன், நிலையான தன்மையில் இல்லை என சர்வதேச நாணய நிதியத்தின் ஊழியர்கள் கடந்த மாதம் இடம்பெற்ற வருடாந்த பொருளாதார மதிப்பாய்வில் தீர்மானித்ததாகவும் சர்வதேச நாணய நிதியத்தின் எந்தவொரு கடன் வழங்கலுக்கு முன்னர் நாடு கடனை நிலைநிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com

⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!

🏠 “தாரணி சூப்பர்மார்கெட்” வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com

🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com

உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp
குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

சிறப்புச் செய்திகள்