செம்மணி மனிதப் புதைக்குழி பேரவலம்!

யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்டத்தின் எட்டாம் நாள் அகழ்வு இன்று முன்னெடுக்கப்பட்டது.

இன்றுடன் 40 மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

யாழ் நீதவான் நீதிமன்ற நீதிபதி A.A. ஆனந்தராஜாவின் மேற்பார்வையில், தொல்லியல் துறை பேராசிரியர் ராஜ் சோமதேவா மற்றும் சட்டவைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் ஆகியோரின் பங்கேற்போடு அகழ்வு இன்றும் நடைபெற்றது.

இதுவரை 34 முழுமையான மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. மேலதிகமாக, 6 மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அதில் இரண்டு எலும்புக்கூடுகள் குழந்தைகளுடையதாக இருக்கலாம் என சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்ட 34 என்புக் கூட்டுத் தொகுதிகளும் யாழ்ப்பாண பல்கலைக்கழக தடயவியல் மற்றும் மானிடவியல் பிரிவில் வைக்கப்பட்டுள்ளன.

சிறப்புச் செய்திகள்