சுன்னாகத்தில் நண்பர்களுடன் மது அருந்திக்கொண்டிருந்த இளைஞர் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் புன்னாலைக்கட்டுவன் பகுதியைச் சேர்ந்த திருநாவுக்கரசு துஜீவன் (வயது 27) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த இளைஞனும் அவரது நண்பர்களும் நேற்றிரவு மதுபானம் அருந்திக்கொண்டிருந்தனர்.
அதன்போது, இளைஞனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில் உடனிருந்த நண்பர்கள் அவரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பித்தனர்.
இருப்பினும் குறித்த இளைஞன் உயிரிழந்ததையடுத்து அவரது நண்பர்கள் சிலர் தலைமறைவாகியதால் சுன்னாகம் காவல்துறையினர் அவர்களை தேடும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
Post Views: 187